Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

காமெடி நடிகர் மதன்பாபு காலமானார்

நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் அறிமுகமானவர் மதன் பாப் என்கிற மதன் பாபு. பிரண்ட்ஸ், பம்பல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், வில்லன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சென்னை பெசன்ட்நகரில் வசித்து வந்த மதன் பாபு கடந்த சில காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று மாலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.
மதன் பாபு குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். இது தவிர இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு மோட்டிவேஷன் தரும் பேச்சாளராகவும் இருந்து வந்தார். தவிர டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடுவராக பணியாற்றி இருக்கிறார். youtube இல் தோன்றி மோட்டிவேஷன் (ஊக்குவித்தல்) உரைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். கடைசியாக அவர் நிகழ்த்திய இது போன்ற ஒரு நிகழ்ச்சி தற்போது youtube இல் வைரலாகி வருகிறது.

Related posts

லைப் ஆப் லூம் ஆவண பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Jai Chandran

ரங்கோலி (பட விமர்சனம்)

Jai Chandran

Vikram First Glance

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend