Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகனாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர் பதம் குமார்.!

திரைப்பட தயாரிப்பாளர்  பதம் குமார் (PK) ஒர் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் , இயக்குனர் , திரைக்கதை ஆசிரியர் கதையாசிரியர், தயாரிப்பாளர், ஆவார். இவருடைய தந்தை எச்.எஸ்.வேணு  தெலுங்கு சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமி பூஜா, ஜெகன் மோகினி உள்ளிட்ட 160 திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக எச்.எஸ். வேணு பணியாற்றியுள்ளார்.

தெலுங்கு, கன்னட மொழி திரைப்பபடங்களுக்கு பதம் குமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் பதம் குமார் (PK) தான் முதன் முதலில் உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராயை அறிமுகம் செய்தார். மேலும் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன்  முதல் படமான போடா போடி படத்தை தயாரித்து அவரை அறிமுகம் செய்ததும் இவர்தான்.

பதம் குமார் Yash Raj Films (Bombay) நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் ஆவர். இவர் தயாரிப்பில் 2014ம் ஆ‌ண்டு பிரபல நடிகர் நானி மற்றும் வானி கபூர் நடிப்பில் ஆஹா கல்யாணம் என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளராக, கதையாசிரியராக, திரைக்கதையாசிரியராக, இயக்குனராக தயாரிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வரும் இவர் தற்போது NETFLIX-ன் பாவக்கதைகள் என்ற web series –ல் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய “Love panna Utranum” segment-ல் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். விரைவில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை அவர் தயாரிக்க உள்ளார்..

Related posts

தேஜாவு (பட விமர்சனம்)

Jai Chandran

Prajin’s edge-of-seat political thriller titled ‘Sevakar’

Jai Chandran

தனுஷ் – ராஷ்மிகாவின் “குபேரா” பட இசை விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend