Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கஜானா ( பட விமர்சனம்)

படம்: கஜானா

நடிப்பு: வேதிகா, சாந்தினி, இனிகோ பிரபாகர், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன்

தயாரிப்பு: ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ்

இசை: அச்சு ராஜாமணி

ஒளிப்பதிவு: கோபி துரைசாமி, வினோத் ஜே.பி.

இயக்கம்: பிரபாதீஸ் சாம்

வெளியீடு: Tகிரியேஷன் திருமலை
:
பிஆர்ஓ: தர்மா, சுரேஷ்

நாகமலையில் இருக்கும் சிவன் அருள் பெற்ற பஞ்ச பூதங்களையும் அடக்கும் சக்தி வாய்ந்த நாக கற்களை யாளி மிருகம் பாதுகாத்து வருகிறது. அதுபற்றி தகவல் அறிந்து அந்த புதையலை யாராவது எடுக்க அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சென்றால் அவர்கள் பலியாவது காலம் காலமாக தொடர்கிறது. இந்நிலையில் அந்த புதையலை கைப்பற்ற இனிகோ பிரபாகர் ஒரு டீமுடன் காட்டுப்பகுதிக்கு செல்கிறார். அவர்களை யாளி மிருகம் தாக்குகிறது. அவர்களால் அந்த புதையலை எடுக்க முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்.

தனிமையான காட்டுப்பகுதி, யானை சிங்கம், புலி, பாம்பு என்று மிருகங்களுடன் கூடிய ஒரு சுவாரஸ்யமான கதையை திரையில் பார்த்து வெகு காலம் ஆகிவிட்டது. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் உருவாகி இருக்கிறது கஜானா திரைப்படம்.

கோயில்களில் சிற்ப வடிவில் யாளி என்ற மிருகம் காணப்படும். சிங்க தலை, யானை முகம் கொண்ட இந்த வித்தியாசமான மிருகத்தை இதுவரை எந்த திரையிலும் பார்த்ததில்லை. முதன்முறையாக கஜானா படத்தில் யாளி மிருகத்தை மையமாக வைத்து கதை அமைத்திருப்பது விறுவிறுப்பாக மட்டுமல்ல, யாளி மிருகம் நிஜத்தில் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாகவும் இந்த படத்தில் யாளி மிருகத்தை வி எஃப் எக்ஸ், கிராபிக்ஸ் காட்சியில் வடிவமைத்திருப்பது அற்புதமோ அற்புதம்.

இது தவிர யானை, கருடன், அனகோண்டா பாம்புகள், புலி என பல்வேறு மிருகங்கள் இப்படத்தில் கிராபிக்ஸ் வடிவில் இடம் பெற்றிருப்பது ஆர்வத்தை தூண்டுகிறது.

புதையலை தேடிச்சொல்லும் ஹீரோவாக இனிகோ பிரபாகர் நடித்திருக்கிறார். பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த இனிகோ பிரபாகர் இப்படத்தில் ஹீரோவாக மாறி இருக்கிறார். வேடத்துக்கு ஏற்ப டேப் வைத்து அளந்ததுபோல் கச்சிதமாக நடித்திருக்கிறார். இந்த ஹீரோ வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் தனது உடற்கட்டை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்வதற்கு தேவையான பயிற்சிகள் கண்டிப்பாக செய்தாக வேண்டும். அந்த முயற்சி இவருக்கு சோலோ ஹீரோவாக வலம்வர பக்க பலமாக இருக்கும்.

யோகி பாபு, ௯மொட்டை ராஜேந்திரன் காமெடி டிராக் செய்து இருக்கிறார்கள். அவர்களது லூட்டி குழந்தைகளை சிரிப்பூட்டும்.

வேதிகா ஒரு சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் வருகிறார், சாந்தினி மாயாஜால கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

அச்சு ராஜாமணி இசை கை கொடுத்திருக்கிறது.

கோபி துரைசாமி, வினோத் ஜே.பி. கேமிரா காட்டுப்பகுதியில் சுற்றிச் சுழன்றிருக் கிறது

இயக்குனர் பிரபாதீஸ் சாம் கதையை ஆன்மீகம், கற்பனை, சாகசம், மாயாஜாலம் என்று கலந்து பெரியவர்களையும் சிறுவர்களையும் கவரும் வகையில் இயக்கியிருக்கிறார். குறிப்பாக மிருகங்கள் வரும் கிராபிக்ஸ் , வி எப் எக்ஸ் காட்சிகளில் கவனம் செலுத்தி ரசிக்கப்படும்படி படமாக்கி இருப்பது பாராட்டத்தக்கது.

கஜானா – குழந்தைகளுக்கு கோடை விழா.

 

 

 

 

 

Related posts

வேதா (இந்தி டப்பிங் பட விமர்சனம்)

Jai Chandran

Rambhala Directorial “Vandhan Suttan Repeatu

Jai Chandran

ரஜினி மகள் ஐஸ்வர்யா இந்தி படம் இயக்குகிறார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend