Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பனி விழும் இரவு (பட விமர்சனம் )

படம்: பனி விழும் இரவு

நடிப்பு: அருண் கார்த்தி, எனாக்ஷி கங்குலி,  கஜராஜ், உறியடி சுருளி, ஓம் செல்வா, கருப்பு நம்பியார், சரவண சக்தி, சேரன் ராஜ்,

தயாரிப்பு: சதா முருகன், ஜெயக்குமார்

இசை: சதா முருகன்

ஒளிப்பதிவு  ஜெயக்குமார் தங்கவேல்

இயக்கம்: சே ரா ராஜேஷ்

பிஆர்ஓ : சரண்

கதை : திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பெண் எனாஷியுடன்  போட்டோ சூட் நடத்துவதற்காக கொடைக்கானல் வரும் அருண் கார்த்தி. திடீரென்று போலீஸ் நிலையத்துக்கு வந்து தான் திருமணம் செய்து கொள்ளவிருந்த  பெண்ணை  காணவில்லை எப்படியாவது கண்டுபிடித்து கொடுங்கள் என்று அழுது புலம்பி புகார் கொடுக்கிறார். முதலில் அதை நம்பாத போலிஸ் பின்னர் ஏற்கனவே அருண் தங்கி இருந்த வீட்டில் தற்கொலை சம்பவம் ஒன்று நடந்திருப்பதால்  பெண்ணை தேடப் புறப்படுகிறார்கள். அந்தப் பெண் என்ன கதியானாள்? பேயின் விளையாட்டு ஏதும் நடந்ததா? அல்லது யாராவது கடத்தி விட்டார்களா? என்று விடை தெரியாத கேள்விகளுக்கு திருப்பமான பதில் அளிக்கிறது.கிளைமாக்ஸ்

இளம் நடிகர்கள்  அருண் கார்த்தி, எனாக்ஷி கங்குலி ஜோடி பேய் நடமாடுவது போல் பயமுறுத்தும் அந்த வீட்டில் தனியாக இருப்பதும், எதிர்பாராத அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதும் அரங்கை ஜில்லிட வைக்கிறது.

முதல் பாதியில் காதல் சிலுமிசத்துடன் நகரும் காட்சிகள் திடீரென்று போலீஸ் என்ட்ரி கொடுத்ததும்  மர்ம கதையாக மாறுவதும், எதிர்பார்க்காத திருப்பத்துடன் கிளைமாக்சுக்கு  பயணிப்பதும் ராஜேஷ் குமாரின் மர்ம நாவலை படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

கஜராஜ், உறியடி சுருளி, ஓம் செல்வா, கருப்பு நம்பியார், சரவண சக்தி, சேரன் ராஜ் என ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை மிகை இல்லாமல் நடித்திருப்பதால் காட்சிகள் நம்பும்படி அமைந்திருக்கிறது.

சதா முருகன், ஜெயக்குமார் இணைந்து படத்தை தயாரித்திருப்பதுடன் சதா முருகன்  இசையும் அமைத்திருக்கிறார், அதேபோல் ஜெயக்குமார் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்

இயக்குனர் சே ரா ராஜேஷ்  ஏனோ தானோ என்றில்லாமல் திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லராக படத்தை இயக்கியிருப்பது அவரது இயக்கத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி.

பனி விழும் இரவு – எதிர்பாராத திருப்பங்கள் இறுதிவரை ரசிகர்களை இருக்கையில் கட்டி போடும்.

 

 

Related posts

கார்பரேட் கையில் சினிமா: கவிஞர் இயக்குநர் பிரியன் புகார்

Jai Chandran

ரஜினிகாநத் அரசியலுக்கு முழுக்கு ஏன்? முழுவிவரம்

Jai Chandran

சூரியின் ‘மாமன்’ பட பர்ஸ்ட் லுக்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend