Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

எனிமி ஆப் தி ஸ்மக்லர்  (பட விமர்சனம் )

படம்: எனிமி ஆப் தி ஸ்மக்லர்

நடிப்பு: ஜேடி சக்கரவர்த்தி, லால், ராதிகா,  சரண் சக்தி, பாலசரவணன்,  சிமேஹா,, காளி வெங்கட், ஜாபர் சாதிக், மைம் கோபி, சமய முரளி

தயாரிப்பு: எஸ் ஆர் ட்ரீம் ஸ்டுடியோ

இசை: சமய முரளி

ஒளிப்பதிவு: க வின் பாஸ்கர்

இயக்கம்: டி சமய முரளி

பிஆர்ஓ : நிகில் முருகன்

கதை: வெளிநாட்டிலிருந்து கப்பல் வழியாக ரகசியமாக வரும் போதை மருந்துகளை  கடத்தல் தலைவன் லிங்கம் ( ஜேடி சக்கரவர்த்தி ) லாவகமாக கடத்தி சப்ளை செய்கிறார்   வறுமையில் இருக்கும் இளைஞன் அமர்  (சரண் சக்தி ): குறுக்கு வழியில் சம்பாதித்து பணக்காரனாக திட்டமிடுகிறான்  லிங்காவிடம் கடத்தல் வேலையில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க தொடங்குகிறான். ஒரு சமயம் பல கோடி மதிப்புள்ள போதை மருந்தை அமர் திருடிவிட்டதாக கோபமடையும் லிங்கம் கொல்லத் துணிகிறான். அடுத்து நடந்தது என்ன என்பதை சஸ்பென்ஸாக விளக்குகிறது கிளைமாக்ஸ்.

பலத்த பாதுகாப்பு நிறைந்த  துறைமுகங்களில் உள்ள அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு அங்குள்ள போதை மருந்து ட்ரக்குகளை  சரண் சக்தியும், பால சரவணன் இணைந்து சாதுர்யமாக கடத்துவது விறுவிறுப்பு. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு   துருவித் துருவி ஆராய்ச்சி செய்யும் பெண் அதிகாரியை நொடிப்பொழுதில் பால சரவணன் ஏமாற்றி டிரக்குகளுக்கு கிளியரன்ஸ் தருவதெல்லாம் திக்திக் என நகர்கிறது.

25 ஆயிரம் கோடிக்கு கடத்தி வரப்படும் போதை மருந்து டிரக்குகள் எப்படி துறைமுகத்தில் இருந்து அதிகாரிகளுக்கு தெரியாமல் வெளியே கொண்டு வரப் போகிறார்கள் என்ற காட்சி  ரசிகர்களை நிமிர வைக்கிறது.

கடத்தல் மன்னன் சக்ரவர்த்தி,  லால் ஆகியோர் நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார்கள்.  இருவரும் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் போட்டி களமாக மாற்றி இருப்பது அரங்கையே பரபரப்பாக்குகிறது

ஹீரோவின் தாயாக ராதிகா  உருக்கமாக நடித்து கவர்கிறார். ஹீரோயினாக சிமேஹா அவரது அண்ணனாக காளி வெங்கட் நடித்துள்ளனர்

துறைமுக அதிகாரியாக வரும் இயக்குனர் சமய முரளி ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் பாணியில் நடித்து கவர்கிறார். படம் முழுவதுமே டென்ஷன் குறையாமல் இயக்கி ஜெய்சங்கர் படத்தை பார்த்த ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

க  வின் பாஸ்கர் ஒளிப்பதிவு தெளிவு.

எனிமி ஆப் தி ஸ்மக்லர்  – ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான  ஆக்சன் படம்.

Review by K Jayachandhiran www.trendingcinemasnow.com

 

Related posts

Arun Vijay’s son Arnav Vijay starts dubbing for his debut movie

Jai Chandran

first look of #Shaakuntalam to be revealed on Feb 21st

Jai Chandran

ரூ.926 கோடி பாக்கி: தமிழகம் மின்சாரம் வாங்க மத்திய அரசு தடை: மநீம அறிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend