Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் விமர்சனம்

காமி (பட விமர்சனம்)

படம்:காமி

நடிப்பு: : விஸ்வெக்சன்  சாந்தினி சவுத்ரி,  அபிநயா, ஹாரிக்கா பெட்டா

தயாரிப்பு :கார்த்திக் சபரீஷ்

இசை:: நரேஷ் குமரன்

ஒளிப்பதிவு: விஷ்வநாத் ரெட்டி செலுமல்லா

இயக்கம்: வித்யாதர் ககிட்டா

பிஆர்ஓ : யுவராஜ்

இளம் அகோரி விஸ்வெக்சன் ஒரு வித்தியாசமான நோயால் அவதிப்படுகிறார். அதாவது மனிதர்களை தொட்டால் அவருக்கு மரண வேதனை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது இதிலிருந்து மீள்வதற்கு வழி தெரியாமல் தவிக்கும் விஷ்வக் இது பற்றி அகோரி தலைவரிடம் யோசனை கேட்க அவர் ஒரு தீர்வை சொல்கிறார். பனி படர்ந்த இமயமலை பகுதியில் 36 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் மாலி பத்ரா என்ற ஒளிரும் மூலிகை தான் இதற்கு தீர்வு அதை  கொண்டு வா என்கிறார்..  விஸ்வக் மூலிகையைத் தேடி இமயமலை பனி படர்ந்த உச்சிக்கு செல்கிறார்.  அவருடன்  இளம் பெண் சாந்தினியும்  சேர்ந்து கொள்கி றார். இந்த கதை தொடர்ந்து கொண்டிருக்க மற்றொரு கதை தொடர்கிறது. ஆந்திராவில் தன் மகளை தேவதாசி ஆக்க  மறுக்கும் தாயை எதிர்க்கும் ஊர் திடீரென்று அவரது மகளை கடந்துகிறது. இந்த கதை இன்னொரு பக்கம் நகர்கிறது. இந்திய சீன எல்லையில் பனிபடர்ந்த பகுதியில் சிறுவன் ஒருவன் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக எலிபோல அடைத்து வைத்து பரிசோத னைக்கு உட்படுத்தப்படுகிறான் அவனது கதி என்னவாகிறது என்பது மூன்றாவது கதையாக இணைந்து காமி திரைக்கதை செல்கிறது. மூன்றுக்கும் என்ன தீர்வு என்பதற்கு   படம் பதில் அளிக்கிறது.

ஒரே படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் வருவது புதிதல்ல என்றாலும் இதில் கையாளப்பட்டி ருக்கும் கதைகள்  முற்றிலும் மாறுபட்டது. விஞ்ஞானமும் ஆன்மீகமும். கதையில் பின்னிப் பிணைந்து செல்வது முற்றிலும் புதிய அனுபவத்தை தருகிறது.

காசியிலிருந்து தொடங்கும் பயணம்  ஆன்மீக அனுபவத்தை ஆரம்பத்திலேயே உள்ளுக்குள் பதிய வைக்கிறது அதே பாதையில் வெவ்வேறு கோணங்களில் காட்சிகள் செல்லும்போது இது வித்தியாசமாக இருக்கிறதே என்று  உணர்வு ஏற்படுகிறது.

தெலுங்கு படங்கள் ஆந்திர கார மசாலா வகைகளுடன் இருப்பது தான் அதன் முத்திரை ஆனால் காமி அந்த பாணியில் இருந்து முற்றும் மாறுபட்டு ஒரு அமைதி ஆன்மீக புரட்சியை செய்திருக். கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இப்படம் ஆந்திர ரசிகர்களிடைய பெரும் வரவேற்பு பெற்று வசூலில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் இயக்குனர்
வித்யாதர் காகிடா ஒரு புதுமுக இயக்குனர் என்பதை நம்ப முடியவில்லை.  நான் – லீனினர் முறையில் எடிட்டிங் செய்யப்பட்டு அதை குழப்பம் இல்லாமல் கையாண்டிருக்கும் விதமே அவரது வெற்றிக்கு கை கொடுத்திருக் கிறது

நரேஷ் குமரன் பின்னணி இசை காட்சிக்குள் ஒன்றச் செய்து விடுகிறது. அதேபோல் விஸ்வநாத் செலுமல்லாவின் கேமரா அதன் லென்ஸ்களை நம் கண்களுக்குள் பொருத்தி விட்டு கூடவே அழைத்த செல்கிறது.

காமி – இது ஒரு புது அனுபவம்.

 

 

Related posts

விருமன் (பட விமர்சனம்)

Jai Chandran

KodiyilOruvan , VijayaRaghavan Team Whishes Vijayantony

Jai Chandran

Prabhu Deva New Avathar from My Dear Bootham

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend