Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் விமர்சனம்

காடு வெட்டி ( பட விமர்சனம்)

படம் : காடுவெட்டி

நடிப்பு: ஆர். கே. சுரேஷ் சங்கீர்த்தனா,, விஷ்மியா, சுப்ரமணியசிவா, அகிலன். ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா
சுப்பிரமணியன்

தயாரிப்பு: த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி. பரமசிவம், ஜி. ராமு சோலை ஆறுமுகம்

பின்னணி இசை : ஸ்ரீகாந்த் தேவா

பாடல்கள் இசை : வணக்கம் தமிழா சாதிக்

ஒளிப்பதிவு – எம். புகழேந்தி

இயக்கம்: சோலை ஆறுமுகம்

பி ஆர் ஒ : மணவை புவன்

காதலுக்கு படித்தவர்கள் மத்தியில் சாதி ஒரு தடையில்லை என்று முதல் அத்தியாயத்தில் கூறும் இக்கதை அதே மனிதர்கள் படிப்பறிவு இல்லாத கிராமப் பகுதியில் வாழும் போது அவர்களுக்குள் ஜாதிப் பிரிவினை எப்படி எல்லாம் தாண்டவம் ஆடுகிறது. அவர்களுக்குள் எப்படி ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தி கலவரத்திலும்  கொலையிலும் கொண்டு சென்று விடுகிறது என்று கண் முன்னே தோலுரித்துக் காட்டும் படமாக உருவாகி இருக்கிறது காடுவெட்டி.

அகிலன்-  சங்கீர்த்தனா நகரில் தங்கள் காதலை பகிர்ந்து கொண்டு அதை குடும்பத்தி. னருக்கும் தெரிவிக்கின்றனர் குடும்பத்தினர் அதனை ஏற்று நிம்மதியாக  வாழ்ந்தால் போதும் என்று திருமணம் முடித்து வைக்கிறார்கள். இதே ஜோடி விழுப்புரம் பகுதியில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து ஜாதி வேறுபாடு இல்லாமல் ஜோடிகள் காதலிக்கும்போது   அவர்களுக்குள் ஜாதி தலைவர்கள்  உள் நுழைந்து காதலை வேறருப்பதுடன் காதலித்த உயிர்களையும் எப்படி பழி  தீர்க்கின்றனர் என்பதை பட்டவர்த்தனமாக காடுவெட்டி வெளிப்படுத்துகிறது

நகரக் காதலை ஜாலியாக கடற்கரை ஓர பகுதியில் நடக்க விட்டு சுமூகமாக அகிலன் சங்கீர்த்தனா எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும்போது இது என்னடா காதல் இவ்வளவு ஈஸியா என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இதே ஜோடி படிக்காத கிராம பகுதியில் இருந்தால் என்ன ஆகும் என்று தோசையை திருப்பி போட்டு  அதை  இயக்குனர் விவரிக்க தொடங்கியதும் அதில் ஜாதி தலைவர்கள்,

ஜாதி வெறியர்கள்,

ஜாதி குண்டர்கள்,

ஜாதி தடியர்கள்

ஜாதி ரவுடிகள் என்று கிளை கிளையாக திரண்டு வந்து காதலுக்கும் காதலித்த ஜோடி களுக்கும் எமனாக நிற்பதை   காட்சிகள் கண்முன்  நிறுத்தும் போது கதி கலங்குகிறது.

ஊர் பஞ்சாயத்து கூடி சுப்பிரமணியம் சிவாவை அழைத்து வந்து நிறுத்தி ” வேறு ஜாதியை பையனை காதலிக்கும்  உன் மகளை  நீ ஊர் கட்டுப்பட்டு ஏற்று  கொன்றுவிடு”  என்று உத்தரவு போடுவதும் அதை சுப்பிரமணிய சிவா ஏற்றுக்கொண்டு மகள் சங்கீர்த்தனாவுக்கு கோழிக்கறி சாதத்தில் பாலிடால் விஷம் ஊற்றி உண்ண கொடுக்கும்போது நெஞ்சு பதபதைக்கிறது.ஆனால் அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டு சங்கீர்த்தனா பிழைத்துக் கொள் வதும் பின்னர் சுப்பிரமணிய சிவா மகளை அவள் காதலுடன் சேர்த்து வைக்க ஊர் மக்களுக்கு தெரியாமல் நடுநிசியில் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்வதும் திக் திக்.

ஊரை விட்டு ஓடினாலும் ஜாதி வெறி துரத்தி வந்து ஆளை கொல்லும் என்ற கிளைமாக்ஸ் இன்றைக்கும் நடக்கும் ஆணவக் கொலைகளை ரத்த கண்ணீருடன் காண வைக்கிறது.

அகிலன் சங்கீர்த்தனா நடிப்பில் ஸ்பெஷல் இல்லை என்றாலும் சொதப்பாமல் கதாபாத்திரத்தை ஓஒப்பேற்றி இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் ஏ எல். அழகப்பன் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று ஒரு அரசியல் தலைவரை ஞாபகப்படுத்துகிறார்.
அதேபோல் இன்னொரு நடிகர் ப்ளூ சட்டை அணிந்து கொண்டு இன்னொரு அரசியல் தலைவரை ஞாபகப்படுத்துகிறார். இதில்  ப்ளூ சட்டை தலைவர் தங்கள் இளைஞர். களை தூண்டிவிட்டு அவர்களை வேறு ஜாதி பெண்களை காதல் வலையில் வீழ்த்த  சொல்வதாக காட்டுவது, பின்னர் அவரை ஓடவிட்டு ஆர் கே சுரேஷ் வெட்டுவது ஒருதலை காட்சியாக இருக்கிறது.

அதேசமயம் யார் எது சொன்னாலும் அதைக் கேட்டுக் கொண்டு நாங்கள் கண்மூடித் தனமாக செயல்களை செய்ய மாட்டோம் என்று இளைஞர்கள் சொல்வது போல் காட்சி அமைத்திருப்பது ஆறுதல்.

காடுவெட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  ஆர்கே சுரேஷ். ஆக்ரோஷம் தான் அவரது மூலதனம் அதை சண்டை காட்சி களில் அதிரடியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

அகிலன் தாயாராக வரும் நடிகை பார்ப்பவர்களிடம் எல்லாம் சண்டை பிடித்து ஓடவிடுவது காமெடி சிதறல்.
கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சோலை ஆறுமுகம். மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் ஒரே படத்தில் கொட்டி விட வேண்டும் என்ற ஓவர் கான்ஃபிடன்ஸ் அவரது இயக்கத் தில் வெளிப்பட்டிருக்கிறது அதனால் காட்சியில் குழப்பம். . முன்னுக்tகுப் பின்பாக காட்சிகள் வந்து ரசிகர்களை கன்பியூஸ் செய்கிறது. இது நகரத்து காட்சியா? இது கிராமத்து கட்சியா? என்று கணிக்க முடியாத அளவுக்கு ஒரு குழப்பம் கிளைமாக்சில் வெளிப்பட்டு கடுப்பாகி விடுகிறது.
கிளைமாக்ஸ் முடிந்துவிட்டது என்று எழுந்தால் அதற்குப்பின் ஆர் கே சுரேஷ் ருத்ர தாண்டவ ஆக்சன் கிளைமாக்ஸ் ஆங்காங்கே ரசிகர்களை நிற்க வைக்கிறது.
எம் புகழேந்தி ஒளிப்பதீவு செய்துள்ளார்.
ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
எடிட்டரிடம் கத்திரியை கொடுத்து பல காட்சிகளை வெட்டி எறிந்தால் படத்தின் தேவையற்ற பகுதிகள் நீங்கி ஒரு ஸ்கிரிப்பான கதை கிடைக்கும். எடிட்டரின் கத்திரியை இயக்குனர் பிடுங்கி வைத்துக் கொண்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

காடுவெட்டி – சாதி கொடுமைக்கு இன்னொரு சாட்டை

.

 

Related posts

ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை படத்தில் தனுஷ்

Jai Chandran

பொன்னியின் செல்வன் நாவலை சிக்கல் இல்லாமல் படமாக்கிய மணிரத்னம்: ,நடிகர் கார்த்தி பேச்சு

Jai Chandran

Pan India Film Suryavin Sanikizhamai Launched Grandly

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend