Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பிரேமலு (பட விமர்சனம்)

படம்: பிரேமலு

நடிப்பு: நஸ்லான், மமிதா பைஜு, அல்தாப் சலீம், ஷியாம் மோகன்

தயாரிப்பு: பஹத் பாசில்

இசை: விஷ்ணு விஜய்

ஒளிப்பதிவு: அஜ்மல் சாபு

இயக்கம்: கிரீஸ் ஏ டி

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட்

பி ஆர் ஒ:சதீஷ் (AIM)

சச்சின் (அஸ்லான்)  நண்பனுடன் படிப்பதற்காக ஐதராபாத் வருகிறான். வந்த இடத்தில் திருமண விழாவிற்கு செல்லும் சச்சின் அங்கு  ரேணுவை (மமிதா) கண்டு அவரது அழகில் மயங்கிய காதல் கொள்கிறான். ஐ டி யில் வேலை பார்க்கும் ரேணு சச்சினிடம் நட்பாக பழகுகிறார். இதற்கிடையில் ரேணுவின் டீம் லீடர் அவள் மீது காதல் கொண்டு தன் வலையில். வீழ்த்த முயல்கிறான். ஆனால் அவளோ அவனை லீடராக மட்டுமே பார்க்கிறாள். அதேசமயம் சச்சின் நலனில் அக்கறை செலுத்தும் ரேணு அவனை காதலனாக எண்ணாமல் நண்பனாக மட்டும் பார்க்கிறாள். ஒரு கட்டத்தில் சச்சின் தன் காதலை ரேணுவிடம் சொல்கி றான் ஆனால் அவள் அதை ஏற்க மறுக்கிறாள். மனம் வெறுத்துப் போன சச்சின் இனி ஊரில் இருப்பதில்லை வெளிநாட்டுக்கு செல்வது என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்து விசாவும் பெற்று விடுகிறான். சச்சின் பிரிவை உணர்ந்த ரேணு மனதில் சோகமடைகிறாள் பின்னர்தான் அவளுக்கு சச்சினை தானும் காதலிக்கிறோம் என்பது.தெரிகிறது.  இந்நிலையில் ரேணுவின் லீடர் இவர்களை தாக்க அடியாட்களை அழைத்து வருகிறார். அதன் பிறகு நடப்பது என்ன சச்சின் – ரேணு காதல் என்னவானது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

நடிகர் பகத் பாசில் இப்படத்தை தயாரித்திருக்கிறார். வழக்கமான காதல் கதை என்றாலும் திரைக்கதையில் மாற்றம் காட்டி காட்சிகளை சுவைபட இயக்கியி ருக்கிறார் இயக்குனர்.

சச்சினாக வரும் நஸ்லான் இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். முதல் காதலிலேயே அவர் மூக்குடைந்து அப்செட் ஆவதும் தனக்கு எந்த பெண்ணும் செட் ஆகவில்லை என்று புலம்பி நண்பனுடன் ஹைதராபாத்துக்கு படிக்க சென்றதும் காட்சிகள் மாறுகின்றன.

வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கும் அஸ்லானை டியூஷன் மாஸ்டர் எழுப்பி ஏன் தூங்குகிறாய் என்று கேள்வி கேட்டுவிட்டு பின்னர் குறட்டை விடாமல் தூங்கு வேறு யாரும் தூங்க கூடாது என்று கண்டிஷன் போடுவது காமெடி.

திருமண விழாவிற்கு செல்லும் அஸ்லான் அங்கு மமிதாவைக் கண்டு ஒரே பார்வையில் காதல் கொண்டு அவர் ஞாபகமாகவே  சுற்றுவதும் நட்புடன்தான் தன்னுடன் அஸ்லான் பழகுகிறார் என்று எண்ணி மமிதா அவருடன் ஊர் சுற்றுவதும் இது காதலில் தான் போய் முடியும் என்ற அறிகுறியை காட்டுகிறது.

அஸ்லான் இழுத்த இழுப்புக்கெல் லாம் வரும் மமிதா, ” உன்னை நான் காதலிக்கவில்லை நண்பனாகத் தான் பழகுகிறேன்” என்று சொல்வது வழக்கமான சினிமா டயலாக. எப்படியும் சில சென்டிமென்ட் காட்சிகளை அமைத்து இவர்கள் காதலை இயக்குனர்  சேர்த்து வைப்பார் என்ற ரசிகர்களின் யூகங்களை படிப்படியாக நிறைவேற்றி அதை கிளைமாக்ஸ் ஆகவும் அமைத்திருக்கிறார். அதில் கொஞ்சம் முரண்டு, கொஞ்சம் ஆக்சன், கொஞ்சம் கலகலப்பு,  கொஞ்சம் விறுவிறுப்பு என்று கலந்து காட்சிகளை  நகர்த்தியி ருப்பது தான் படத்தை கிளைமாக்ஸ்வரை சுவாரசியமாக்கு கிறது.

விஷ்ணு விஜய் இசை ஒ கே அதேபோல் அஜ்மல் சாபு ஒளிப்பதிவு காட்சிகளுக்கு கண்ணாடி பிரேம் போட்டதுபோல் பளபளக்கிறது.

இயக்குனர் கிரீஸ் ஏ டி படத்தை குழப்பம் இல்லாமல் இயக்கி யிருப்பது பிளஸ். அதேசமயம் ஏற்கனவே தமிழில் சில கதைகள் இதே பாணியில் வந்திருக்கிறது அது வெற்றியும் பெற்றிருக்கிறது. இபடத்தில்   நடிகர்கள் புதுசு, களம் புதுசு.

படத்தை ரெட் ஜெயன்ட் ரிலீஸ் செய்திருக்கிறது.

பிரேமலு – இளவட்டங்களுக்கு தூண்டில் போடும்.

 

Related posts

நிர்வாகம் பொறுப்பல்ல (பட விமர்சனம்)

Jai Chandran

கடைசி விவசாயி படத்துக்கு சீமான் பாராட்டு

Jai Chandran

Eagerly Awaited Trailer of Bachelor

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend