Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நிர்வாகம் பொறுப்பல்ல (பட விமர்சனம்)

படம்: நிர்வாகம் பொறுப்பல்ல

நடிப்பு: எஸ் கார்த்தீஸ்வரன், ஸ்ரீநிதி, ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன்

தயாரிப்பு: டி ராதாகிருஷ்ணன்

இசை: ஸ்ரீகாந்த் தேவா

ஒளிப்பதிவு: என் எஸ் ராஜேஷ்

இயக்கம்: எஸ் கார்த்தீஸ்வரன்

பிஆர்ஓ: நிகில் முருகன்

ஹீரோ கே (கார்த்தீஸ்வரன்) தன்னுடன் சிலரை சேர்த்துக்கொண்டு ஆன்லைன் மோசடியில் ஈடுபடுகிறார். ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம், 250 ரூபாய்க்கு செல்போன் என்று பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து ஆட்டையை போடும் வேலையில் ஈடுபடுகிறார் கே. அவரைப் பற்றி போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இன்ஸ்பெக்டர் அன்பரசி (ஸ்ரீநிதி) வாலிபர் கேவை சுற்றிவளைத்து பிடிக்கிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பது சுவாரஸ்யமான கிளைமாக்ஸ் ஆக அமைகிறது.

ஹீரோ “கே”வாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன் நெகட்டிவ் ஹீரோவாக தனது கதாபாத்திரத்தை அமைத்துக் கொண்டு இருந்தாலும் அதன் மூலம் அவர் ரசிகர்களுக்கு.. சொல்லப்போனால் மக்களுக்கு மோசடியில் இருந்து தப்பிக்க ஒரு எச்சரிக்கை தரும் நடிப்பாக வெளியிட்டிருப்பது என்னதான் நெகடிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் அவரை ஹீரோ இமேஜ்க்கு உயர்த்தத்தான் செய்கிறது.

ஆள் என்னமோ ஒல்லிபிச்சான் ஆக இருந்தாலும் மோசடி திட்டங்கள் போட்டு மக்களை ஏமாற்றும் போது இப்படித்தான் ஆன்லைனில் மோசடிக்காரர்கள் ஏமாற்றுகிறார்களோ என்ற தெளிவு பிறக்கிறது. தத்ரூபமாக அந்த கதாபாத்திரத்தில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் கீர்த்தீஸ்வரன்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரும் ஸ்ரீநிதி இளமையான போலீசாக இருந்தாலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

பைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாறும் லிவிங்ஸ்டன் எபிசோட் சென்டிமெண்டாக மனதை தொடுகிறது.

ஆதவன் உள்ளிட்ட இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள்.

டி ராதாகிருஷ்ணன் படத்தை தயாரித்திருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் காட்சிகளை மெருகேற்றி இருக்கிறார். என் எஸ் ராஜேஷ் ஒளிப்பதிவு காட்சிகளை பளபளக்க காட்டுவதுடன் லக்ஷுரியாகவும் காட்டியிருக்கிறது.

நடிகராகவும் இயக்குனராகவும் எஸ் கார்த்தீஸ்வரன் பாஸ் ஆகியிருக்கிறார். படத்தில் உயர் அதிகாரிகளை பணம் கொடுத்து சரி கட்டுவது போல் காட்டி இருப்பதும், தப்பு செய்தவனை எந்த தண்டனையும் இல்லாமல் தப்பிப்பது போல் காட்டி இருப்பதையும் சென்சார் எப்படி அப்ஜெக்ட் செய்யாமல் விட்டார்கள் என்பது கேள்விக்குறி..

நிர்வாகம் பொறுப்பல்ல – பார்த்து விழிப்புணர்வு பெறவேண்டிய படம்.

Review By
K.Jayachandhiran
www.trending cinemas now.com

 

Related posts

கேஜிஎஃப் சேப்டர் 2 , மூன்று ஆண்டு நிறைவு

Jai Chandran

‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது..

Jai Chandran

டங்கி டிராப் 6: தில்ஜித் தோசன்ஜ் குரலில் ‘பந்தா’ பாடல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend