MISSION: IMPOSSIBLE-DEAD RECKONING PART ONE
இப்படம், ‘மிஷன்: இம்பாசிபிள் – ஃபால்அவுட் (2018)’ படத்தின் தொடர்ச்சியாகவும், இப்படத் தொடரின் ஏழாவது படமாகவும் வரவுள்ளது.
‘மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெகனிங் பாகம் 1’ படத்தில், ஈதன் ஹன்ட்டும், அவரது IMF குழுவும், உலகையே அச்சுறுத்தும் புத்தம் புதிய, பயங்கரமான ஆயுதம், கெட்டவர்கள் கையில் கிடைக்காமல் தடுக்கும் மிக கடினமான பணிக்குப் புறப்படு கிறது. எதிர்காலத்தின் கட்டுப்பாடும், உலகின் தலைவிதியும் ஆபத்தில் இருக்க, ஈத்தனின் இருளடர்ந்த கடந்த காலம் நெருக்க, உலகம் முழுவதும் பயணிக்கும் ஆபத்தான சாகசம் தொடங்குகிறது. ஒரு மர்மமான, சர்வ வல்லமையுள்ள எதிரியை எதிர்கொள் ளும் ஈதன், தனது பணியை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்று கருத வேண்டிய நெருக்கடிக்கு உள்ளா கிறார். அவர் மிகவும் அக்கறை கொண்டவர் களின் வாழ்க்கையை விடவும் கூட இந்தப் பணி அதி முக்கியத்துவமான தாக மாறுகிறது ஈதனுக்கு.
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 6, 2020 அன்று தொடங்கியது. அந்தப் படப்பிடிப்பில், கடற்பரப் பை விட 1200 நார்வே யின் ஹெல்செட்கோபன் மலையில், கடல் மட்டத்தி லிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரமான ஒரு செங்குத்து பாறையில், ஒரு சரிவு மேடை அமைத்து, மாற்றியமைக் கப்பட்ட ஹோண்டா CRF 250 பைக்கை ஓட்டு வதைக் காண முடிந்தது. பின் 4000 அடி குறுகிய மலையிடுக்கில் பைக்குடன் குதித்து, தரையில் இருந்து 500 அடி தூரத்தில் பாரா சூட்டைத் திறந்து தரை யிறங்கினார். இதற்காகப் படத்தின் முன் தயாரிப்பின் பொழுது, ஒரு வருடம் ஒத்திகை பார்த்துள்ளார். கேமரா வைத்து இந்தக் காட்சி படமாக்கப்படு வதற்கு முன், 500 ஸ்கை டைவ் (skydive)-களையும், 13000 motocross jumps-களையும் பயிற்சிக் காகச் செய்து முடித்து, அதி பயங்கர ஸ்டன்ட் காட்சிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். இப்படியான அர்ப்பணிப்பால், டாம் க்ரூஸ் மீண்டுமொரு முறை வெள்ளித் திரையில் ஜொலிக்கத் தயாராகிவிட்டார். இவ்வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘மிஷன் இம்பாசிபிள் – டெட் ரெகனிங்’ படத்தின் மூலம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலையும் புயல் போல் கவரவுள்ளார்.
