Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மாவீரன் (பட விமர்சனம்)

படம்: மாவீரன்

நடிப்பு: சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, மிஷ்கின், சுனில், மோனிஷா பிளாசி, யோகிபாபு,

தயாரிப்பு: அருண் விஸ்வா

இசை: பரத் சங்கர்

ஒளிப்பதிவு: விது அய்யன்னா

இயக்கம்: மடோனே அஸ்வின்

கூவத்து சேரி பகுதியில் தாய், தங்கையுடன் வசிக்கிறான் தினசரி பத்திரிகைக்கு கார்ட்டூன் கதை வரைந்து கொடுக்கும் சத்யா. (சிவகார்த்திகேயன்). திடீரென்று குடிசை பகுதியை காலி செய்து விட்டு  அடுக்குமாடி குடியிருப்புக்கு  சேரி பகுதி மக்ககளை  இடம் மாற்றுகிறார் அமைச்சர் (மிஷ்கின்). தரமில்லாத அந்த கட்டிடம் அடிக்கடி பழுதாகிறது. அதை தட்டிக்கேட்க முடியாத கோழையாக  இருக்கிறான் சத்யா. தங்கையை அவமானப்படுத்திய என்ஜினியரை   சத்யா அடிக்க பாய்கிறான். அதுமுடியாத நிலையில் தற்கொலைக்கு முயல்கிறான். அதிசயமாக உயிர் பிழைக்கும் சத்யாவுக்கு தான் வரையும் கார்ட்டூனில் வரும் மாவீரன்  அசரீரியாக பேசுவது காதுக்கு கேட்கிறது. அது சொன்னதை செய்யும் அவன் மினிஸ்டர் ஆட்களை அடித்து துவம்சம் செய்கிறான் . கோபம்  அடையும் மினிஸ்டர்,  சத்யாவை கொல்ல ஆட்களை  ஏவுகிறார். அவர்களிடம் மன்னிப்பு கேட்க முயன்றாலும் அசரீரி சொல்வதை செய்வதால் அடியாட்கள் பந்தாடப் படுகின்றனர். இதனால்  மினிஸ்டர் மேலும் கோபம் அடைகிறார். இதன் முடிவு  என்ன என்பதை  பல திருப்பங்களுக்கு பிறகு கிளை மாக்சில் விடை கிடைக்கிறது.

சிவகார்த்திகேயன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கி றார். தொடக்கத்தில்.தண்ணி பிடிக்கும்.இடத்தில் சண்டைபோடும் அம்மாவை அழைத்து வந்து சண்டைபோட வேண்டாம் என்று  சமாதானம் செய்வதும், எந்த வம்புக்கும் செல்லாமல் யாராவது அதட்டினால் கூட   கோழை போல் பயந்தபடி சண்டை போடாமல் ஓடுவது சிறுவர்களை கைகொட்டி சிரிக்க வைக்கும்.

தாய் தன்னை திட்டிவிட்டார் என்பதற்காக மொட்டை மாடியிலி ருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள உயரத்தில் நிற்பதை பார்க்கும்போது கால்களில் ஒருவித நடுக்கம் ஏற்படுகிறது. தற்கொலை வேண்டாம் என்று முடிவு செய்து கீழே இறங்க முயலும்போது நடக்கும் அந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்து கிறது

அசரீரி சொல்லும் பேச்சை கேட்டு மந்திரி மிஷ்கினின் ஆட்களை அடிக்கும் சிவகார்த்திகேயன் அவர்களிடம், ” சாரின்னா சாரின்னா ” என்று கொஞ்சுவது காமெடி ஆக்ஷனாக அமைகிறது. கிளைமாக்ஸ் வரை இப்படியே காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது சற்று சலிப்பு தட்டுகிறது.

கடைசிவரை சிவகார்த்திகேயன் காதில் பேசும் அசரீரி  எந்த மாவீரன் குரல் என்று  சொல்லவே யில்லையே என்று கேட்பவர் களுக்கு ஒரே பதில்,  அசரீரியாக பின்னணியில்  பேசுவது விஜய் சேதுபதி வாய்ஸ் என்பதுதான்.

சிவகார்த்திகேயனின் தாயாக நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றுகிறார் சரிதா. மெட்ராஸ் பாஷை பேசி குடிசைப்பகுதி பெண்ணாகவே மாறியிருக்கிறார். சரிதா என்றதும் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. அது ஈடுசெய்யப்படவில்லை.

முழுநேர வில்லன் நடிகராக மாறியிருக்கிறார் மிஷ்கின். எல்லோரையும் மிரட்டும் மிஷ்கின் தன் நண்பனிடம் அடிவாங்கிக் கொண்டு பம்முவது காமெடி.

அதிதி சங்கருக்கு அதிக வாய்ப் பில்லை. சிவகார்த்திகேயனுக்கு கம்பெனி கொடுத்து அவருக்கு தைரியம் சொல்பவராக  வந்து செல்கிறார்.

கட்டிடத்துக்கு பேட்ச் ஒர்க் செய்ப வராக வரும் யோகிபாபு மற்றவர்கள் சொல்வதை கேட்டு அதிர்ச்சியாக பார்த்து சிரிக்க வைக்கிறார். ,”ஒரே வீட்டுக்குள் இத்தனை பேர் உக்காந்திருக்க கிங்க இடிஞ்சி விழுந்தா என்ன பண்ணுவீங்க” என்று எதிர்பாராத பஞ்ச் பேசி குபீர் சிரிப்பால் அரங்கை அலறவிடுகிரார். .

அருண் விஸ்வா தயாரித்திருக் கிறார். பரத் சங்கர் இசை அளவுடன் ஒலிக்கிறது. விது அய்யன்னா ஒளிப்பதிவு வழக்கம் போல்..

மடோனா அஸ்வின் பேண்டசி கதையை இயக்கியிருந்தாலும் ஏழைகளுக்கான குரலாக ஒலித்தி ருப்பது  அப்ளாஸ் பெறுகிறது.

மாவீரன் – குழந்தைகளை கவர்வான்.

 

 

 

 

 

 

 

 

Related posts

Trisha’s Rangi usbekisthan shooting experience

Jai Chandran

NTR30 is April 29th 2022

Jai Chandran

Udanpirappe trailer trending at 4 with massive 3 Million views

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend