Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

14வயது கடலூர் சிறுமி பலாத்கார வழக்கு தீர்ப்பு: ம நீ ம ஶ்ரீப்ரியா வரவேற்பு

முன்மாதிரியானதோர் தீர்ப்பு!

மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிய தாவது:

கடலூரில் 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிகழ்வில், கடலூர் போக்ஸோ நீதிமன்றம் முன்மாதிரியானதோர் தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு, சிறுமிகளுக்கு எதிரான கயமையில் ஈடுபடுவர்களுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்கட்டும்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குமாரக்குடியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, கடந்த 12-2-2019 அன்று இரண்டு சமூகவிரோதிகளால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டார். இந்த வழக்கில் குணசேகரன் என்கிற திலகர் (வயது 34), கட்ட மணியார் என்கிற ஜெய் சங்கர் (49) ஆகியோர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த நிலையில், வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இருவருக்கும் அவர்கள் மரணமடையும் வரை ஆயுள்தண்டனை விதித்து, நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதாவது இருவரும் ஆயுள்காலம் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்கவேண்டியிருக்கும். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டுமென்று சொல்லும் இத்தீர்ப்பு, முக்கியமான ஒன்றாக அமைகிறது. இதன்வாயி லாக குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறையில் ஈடுபடு பவர்களுக்கு அபாயச்சங்கு ஒலிக்கப் பட்டுள்ளது. அதேநேரம், தீர்ப்பின் வழி அந்தச் சிறுமிக்குக் கிடைக்கும் பத்து லட்சம் ரூபாய் தவிர்த்து, கல்வி மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் மனரீதியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக்கொள்கிறது. பண் படாத சமூகத்தில் தண்டனைகள் வாயிலாக வே நீதியையும் அமை தியையும் நிலைநாட்ட இயலும் என்ற வகையில் இத்தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.
இனிவரும் காலங்களில் குற்றங்கள், தண்டனை களற்ற லட்சியச் சமூகம் நோக்கி நாம் மானசீக மாகப் பயணிப்போம். ஒருநாள் நிச்சயம் கண்டடைவோம்.
நன்றி

இவ்வாறு  ஸ்ரீபிரியா கூறியுள்ளார்.

Related posts

இயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’

CCCinema

சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் ஓடும்: கவின் பேச்சு

Jai Chandran

கருணாஸின் ‘என்ன விலை’ பட டிரெய்லர் வெளியீடு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend