Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பூக்கி (பட விமர்சனம்)

படம்: பூக்கி

நடிப்பு: அஜய் திஷான், ஆர்கே தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு, இந்துமதி, ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம் ஜே ஷெரின், ராதா, அஸ்வின் ராம், ஸ்ரேயா ஷர்மி, பிரியங்கா

தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆண்டனி

இசை: விஜய் ஆண்டனி

ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா

எழுத்து: புதிய பரிதி

இயக்கம்: கணேஷ் சந்திரா

பி ஆர் ஓ: சதீஷ் (AIM),

கைலாஷ் (அஜய் திஷான்) ஆழி (ஆர்கே தனுஷா) காதலிக்கின்றனர். சிறு மோதலால் பிரேக் அப் செய்கிறார்கள். பிரேக் அப் செய்ததை மறக்க இருவரும் வெவ்வேறு வேலையில் கவனம் செலுத்துகிறார்கள், இருவரும் வேறு துணை தேடுகிறார்கள். இவர்களால் பிரேக்அப்பை கடக்க முடிந்ததா? இறுதியில் என்ன கதிக்குள்ளாகிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.

2கே, ஜென்சி கிட்ஸ் காதல் கதைகள் சமீப காலமாக திரை உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் வந்திருக்கும் பூக்கி கதைதான் இது.

90ஸ் கிட்ஸ் காலத்துக்கு முந்தியவர்களை பூமர் என்று 2k கிட்ஸ்கள் கிண்டல் செய்கிறார்கள்.
அவர்களை பின்னுக்கு தள்ளிய தலைமுறை ஜென்சி கிட்ஸ்கள். அந்த ஜென்சியை பின்னுக்கு தள்ளிய தலைமுறைகளாக பூக்கி கிட்ஸ் உருவாக்கி இருக்கிறார்கள்.

பூக்கி கிட்ஸ் ஜோடிகள் கைலாஷ், ஆழியாக அஜய் திஷான், ஆர்கே தனுஷா நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே மார்கன் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்த அஜய் திஷான் இப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். நடனம், சண்டை வித்தைகள் கற்று வந்திருப்பது தெரிகிறது.

ஒன்றிரண்டு வார்த்தைகள் அமைதியாக பேசும் அஜய் பொசுக்கென்று கோபப்பட்டு கை நீட்டுவது, திட்டித் தீர்ப்பது, திடீர் முடிவு எடுப்பது எல்லாம் பூக்கி கிட்ஸ்களின் டெம்பர்மெண்ட் என்பதை சீனுக்கு சீன் நிரூபிக்கிறார்.

நடுவீதியில் தன்னை கைநீட்டி அடிக்கும் காதலி தனுஷாவை யோசிக்காமல் பதிலுக்கு கன்னத்தில் அடித்து இன்றைய காதலர்களின் அவசர குடுக்கை செய்கையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

காதலி தனுஷாவின் பிரேக் அப்பை ஏற்க முடியாமல் ஜிம்முக்கு செல்வது, வேறு வேலையில் கவனத்தை திருப்புவது என்று அஜய் ஒரு பக்கம் காதலியால் உடைந்த இதயத்தை ஒட்ட வைக்க முயற்சிப்பதும், அதேபோல் ஷாப்பிங் செய்வது, ஆன்மீகத்தில் ஈடுபடுவது வேறு பாய் பிரண்டை தேடுவது என தனுஷா பிரேக்கப்பை மறக்கடிக்க முயல்வது எல்லாமே இன்றைய இளவட்டங்களின் மன ஓட்டத்தை கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது.

ஒரு சில காட்சிகளில் வந்தாலும் தந்தை கதாபாத்திரத்தில் பாண்டியராஜன் கலங்க வைக்கிறார். மேலும் சுனில், லட்சுமி மஞ்சு, இந்துமதி, ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம் ஜே ஷெரின், ராதா, அஸ்வின் ராம், ஸ்ரேயா ஷர்மி, பிரியங்கா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

படத்திற்கு பெரும்பலமாக அமைந்திருக்கிறது விஜய் ஆண்டனியின் இசை. மதகஜ ராஜாவுக்கு பிறகு விஜய் ஆண்டனியின் பழைய இசை ஊற்று பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு பாடல் காட்சியில் அவரே சிறப்பு தோற்றத்தில் தோன்றி ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவு, இயக்கம் என இரட்டை குதிரையில் சவாரி செய்திருக்கும் கணேஷ் சந்திரா இந்த படத்தை டிஸ்கஷன் அபௌட் பிரேக் அப் என்ற பாணியில் திரைக்கதை அமைத்து வளவளவென்று பேசினாலும் எல்லாமே கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்களாக எழுத்தாளர் புதிய பரிதி அமைத்திருப்பதால் இதை பிரேக் அப் செய்யும் இளவட்டங்கள் நிச்சயம் பார்த்து தங்களது உண்மை காதலை கண்டுபிடிக்கும் சூத்திரமாக பயன்படுத்தலாம்.

பூக்கி – பிரேக் அப் செய்த, செய்யப் போகும் ஜோடிகளுக்கு..

Review By

K.Jatachandhiran
trending cinemas now.com

Related posts

Red Giant Movies to present Prabhas starring Pan-India film ‘Radhe Shyam’

Jai Chandran

First Look of Sharwanand’s OkeOkaJeevitham

Jai Chandran

யாத்திசை ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend