Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பாபா பிளாக் ஷீப் (பட விமர்சனம்)

படம்: பாபா பிளாக் ஷீப்

நடிப்பு: ஆர். ஜெ. விக்னேஷ்காந்த், விருமாண்டி அபிராமி,  அயாஸ், நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, சுரேஷ் சக்ரவர்த்தி, சுப்பு பஞ்சு, போஸ் வெங்கட், ராம் நிஷாந்த், அதிர்ச்சி அருண், ஒ ஏ கே சுந்தர், வினோதினி மற்றும் பலர்

தயாரிப்பு: ராகுல்

இசை: சந்தோஷ தயாநிதி

ஒளிப்பதிவு: சுதர்சன் சீனிவாசன்

இயக்கம்: ராஜ்மோகன் ஆறுமுகம்

பி ஆர்.o4: சதீஷ் (AIM)

 

சேலத்தில் ஆண்கள் பள்ளி, கோ  எஜுகேஷன் என்கிற ஆண், பெண் இருபாலரும்.பயிலும் பள்ளி அருகருகே உள்ளது. பள்ளி  சேர்மன்  திடீரென்று காலமான தால் பள்ளியை நடத்துவதற்கு பிரச்னை எழுகிறது. இந்த நிலையில் அவரது பிள்ளைகள் இரண்டு பள்ளியையும் ஒன்றாக இணைத்து நடத்த முடிவு செய்கின் றனர். இரண்டு பள்ளி ஒன்றா கிறது ஆனால் மாணவர்களுக்குள் போட்டி, மோதல் ஏற்படுகிறது. அயாஸ். நரேந்திர பிரசாத் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து வகுப்பில் கடைசி பெஞ்ச் யாருக்கு என்ற மோதிக் கொள்கின்றனர். இந்நிலையில் யாரோ ஒரு மாணவன் தற்கொலை கடிதம் எழுதி வைத்து சாக உள்ளது தெரிய வருகிறது. அவனது கதி என்னவாகிறது என்ற கேள்வி களுக்கு பதில் தருகிறது கிளைமாக்ஸ்.

முழுக்க 2k கிட்ஸ்களை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பாபா பிளாக் ஷீப். படத்தில் ஹீரோ, வில்லன் என்றெல்லாம் யாரும் கிடையாது மாணவர்களே ஹீரோ, அவர்களே வில்லன்கள்

வகுப்பில் கடைசி பெஞ்சுக்காக நடக்கும் போட்டிதான் படத்தின் முதல் பாதிவரை நீடிக்கிறது. அயாஸ். நரேந்திர பிரசாத் இருவரும் இருகோஷ்டிகளாக பிரிந்து  கடைசி பெஞ்சிக்காக  மோதிக்கொள்வது சிறுபிள்ளைத் தனமாக இருந்தாலும் சுவாரஸ்ய மாக இருக்கிறது.

யார் குறைந்த மார்க் வாங்குவது என்ற போட்டியில் 2 மார்க், 0 மார்க் வாங்கிவிட்டு அதை சந்தோஷத் துடன் பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் கலகலக்க வைக்கின் றனர்.  இரண்டு கேங்கையும் சேர்த்து வைக்க அம்மு அபிராமி அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்வதும் ஆனாலும் அவர்கள் அடித்துக்கொண்டு நாறுவதும் தொடர் கதையாகிறது.

திடீரென்று கிடைக்கும் மாணவரின் தற்கொலை கடிதம் படத்தின் பிற்பகுதியை கொண்டு செல்ல உதவியிருக்கிறது.. தற்கொலை செய்யப்போவது மாணவரா, மாணவியா என்ற சிறு சஸ்பென்சுடன் செல்வது சீன்களை நகர்த்துகிறது. யார் அந்த நபர் என்று தெரியும்போது அதிர்ச்சி பிறக்கிறது.

சக மாணவர்களுடன் ஜாலியாக பழக்கும் இன்னொரு மாணவர் மனதுக்குள் இருக்கும் சோகங் களை கிளைமாக்சில் பகிர்வது பல மாணவர்களின் இதய சுமையை குறைக்கும். மாணவர்கள் தற்கொலைக்கு எந்தெந்த பிரச்னைகள் காரணமாக உள்ளது பெற்றோர்களின் பொறுப்பு என்ன என்பதை சொல்வதும் பலரது கண்களை திறக்கும்.

படத்தில் நடித்திருக்கும் அயாஸ், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட எல்லோருமே நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகின்றனர். குறிப்பாக ஆர் ஜே விக்னேஷ் காந்த் தன்னை ஒரு மக்கு மாணவராக காட்டிக் கொள்வது  கலகலக்க வைக்கிறது.

விருமாண்டி அபிராமி நீண்ட நாட்களுக்கு பிறகு தலை காட்டியி ருக்கிரார். அவரது பாத்திரம் கள்ளக்குறிச்சி மாணவி சாவில் பாதிக்கப்பட்ட  மாணவியின் தாயை ஞாபகப்படுத்துகிறது. சுப்பு பஞ்சு பள்ளி தாளாளராக விரைப்பும் முறைப்பும் காட்டி நடித்துள்ளார். போஸ் வெங்கட், வினோதினி பாத்திரங்களும் நினைவில் நிற்கிறது.

தற்போதுள்ள மாணவர்களின் மனதை அழகாக படம்.பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் ராஜ்மோகன் ஆறுமுகம். பள்ளி மாணவர்கள் கதை என்றாலே காதலை மையப்படுத்தும் கதைகள்தான் அதிகம் வந்திருக் கின்றன. அப்படி இல்லாமல் மாணவ மாணவிகளின் உளவியல் பிரச்னையை படம்.பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. “மனம் திறந்து பேசு பெட்டிகள்”   ஒவ்வொரு பள்ளி யிலும் வைக்கப்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை கதை வலியுறுத்துவது அரசின் கவனத் துக்கு கொண்டு செல்ல வேண்டிய கருத்து.

பாடல்களுக்கு ஆட்டம்போட வைக்கும் இசை அமைத்திருக்கும் சந்தோஷ் தயாநிதி பின்னணி இசையில் கோட்டைவிட்டிருக் கிறார்

சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு தெளிவு.

பாபா பிளாக் ஷீப் – மாணவ, மாணவிகள் மட்டுமல்ல அவர்களது பெற்றோர்களும் .பார்க்க வேண்டிய படம்.

 

 

Related posts

Mannilirunthu lyric video from Thuneri

Jai Chandran

Here is single #FriendshipGaana

Jai Chandran

Dunki ends collection 11.25 on 31 Dec in India

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend