Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பு சங்க புது நிர்வாகிகளுக்கு பாரதிராஜா பாராட்டு

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப் பாளர் சங்கம் சார்பில் தலைவர்    பாரதிராஜா, பொதுச் செயலாளர் டி.சிவா, பொருளாளர்கோ . தனஞ்ஜெயன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இரண்டாவது முறை யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முரளி ராமசாமி மற்றும் அவரின் அணிக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பா ளர்கள் சங்கம், தமிழ் சினிமாவின் தாய் சங்கமாக, பாரம்பரியமாக இயங்கி வருகிறது. அதன் தலைவ ராக, உறுப்பினர்களின் பேராதரவு டன் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, முரளி ராமசாமி, பொருளாளராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, சந்திரபிரகாஷ் ஜெயின் , செயலாளராக மீண்டும் தேர்ந்தடுக்கப்பட்டுள்ள ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ். கதிரேசன, துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கி.கே.எம். தமிழ் குமரன் மற்றும், அர்ச்சனா கல்பாத்தி, இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள எஸ்.. சௌந்தரபாண்டியன்

மற்றும் தேர்வாகியுள்ள 26 செயற்குழு உறுப்பினர்களுக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப் பாளர் சங்க நிர்வாகிகள் சார்பில் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

முரளி ராமசாமி தலைமையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பா ளர்கள் சங்கத்தின் கடந்த நிர்வாகத்தின் போது, திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக எப்படி இணைந்து பயணித்தோ மோ, அதே போல இந்த முறையும் இணைந்து பயணிக்க, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆர்வத்துடன் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related posts

பெண்ணுக்கு ஆட்டோ பரிசளித்த டிரைவர் ஜமுனா படக் குழு

Jai Chandran

மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும்

Jai Chandran

நிறங்கள் மூன்று (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend