Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வெற்றி நடிக்கும் ‘மெமரீஸ்’ படத்தின் டீசர் வெளியானது

ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டுத்தோட்டாக்கள், ஜீவி போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த ஹீரோ வெற்றியின் அடுத்த படமான மெமரீஸ் படத்தின் டீசர் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் நடிகர் ரகுமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது. வெளியான சில மணிநேரங்களிலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் காதல் படமாக இருக்கும். மேலும் இப்படம் முற்றிலும் புதிய முயற்சி. இப்படத்தில் நடிகர் வெற்றியின் சிறந்த நடிப்பை காணலாம் என அப்படத்தின் இயக்குனர் ஷாம் பிரவீன் கூறியுள்ளார். இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்புகள் கொரோனா ஊரடங்கு முடிவில் அறிவிக்கப்படும்.

இப்படத்தின் ஒளிப்பதிவு ஆர்மோ & கிரன். படத்தொகுப்பு சேன் லோகேஷ். இசை கவாஸ்கர் அவினாஷ். வசனம் அஜயன் பாலா, திரைக்கதை ஷாம் பிரவீன் மற்றும் விபின் கிருஷ்ணன். கலை  தென்னரசு. சண்டை பயிற்சி அஷ்ரஃப் குருக்கள். தயாரிப்பு மேலாண்மை எஸ்.நாகராஜன். தயாரிப்பு ஒருங்கிணைப்பு முகேஷ் ஷர்மா. மக்கள் தொடர்பு  ப்ரியா.

Related posts

Kazhumaram First Look Released by JD, Jerry

Jai Chandran

கங்குவா ( பட விமர்சனம்)

Jai Chandran

சத்யராஜ் தாயார் காலமானார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend