Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

திருவின் குரல் ( பட விமர்சனம்)

படம்: திருவின் குரல்

நடிப்பு: அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மீகா

தயாரிப்பு: லைகா சுபாஷ்கரன்

இசை: சாம் சி.எஸ்

ஒளிப்பதிவு: சின்டோ பொதுதாஸ்

இயக்கம்: ஹரிஷ் பிரபு

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா (D’ One)

நடுத்தர குடும்பத்தில் பிறந்த திருவுக்கு (அருள்நிதி) வாய் பேச வராது. ஆனால் அருகிலிருந்து யாராவது பேசினால் காது கேட்கும். இந்த குறைபாடு இருந் தாலும் தவறு செய்பவர்களை அடித்து கேட்கும் கோபம் மட்டும் அதிகம். ஒரு சமயம் தந்தை விபத்தில் சிக்க அவரை அரசு மருத்துவமனையில் சேர்க்கிறான் திரு. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ மனையில் வேலை செய்யும் லிப்ட் மேன் இன்னும் 3 பேர் கூட்டாக சேர்த்துக் கொண்டு கொள்ளை, கொலை என அக்கிரமம் செய்கின் றனர். அவர்களுடன் திருவுக்கு பகை ஏற்படுகிறது. இதில் கோபம் அடையும் அவர்கள் திருவின் தந்தைக்கு விஷத் தன்மை கொண்ட ஊசிபோட்டு சித்ரவதை செய்கின்றனர். அத்துடன் திருவின் வீட்டு பெண்களை மிரட்டுகின்றனர். அவர்களின் அராஜகம் பற்றி தெரிந்ததும் திரு எடுக்கும் முடிவு என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

எளிமையான ஒரு வரிக்கதைதான் ஆனால் அதை கிரைம் ஆக்ஷன், சென்டிமென்ட், திகில் காட்சிகளாக அமைத்திருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் பிரபு.

ஏற்கும் பாத்திரத்துக்கு நிறைவான நடிப்பை தந்து படத்துக்கு படம் கவர்ந்து வரும் அருள்நிதி இப்படத்தில் வாய் பேச முடியாத வராக நடித்தாலும் அதை சென்டி மென்ட்டாக்கி அழுகாச்சி வரவைக் காமல் ஆக்ஷன் அதிரடியாக மாற்றி அசத்தியிருக்கிறார்.

முதல் காட்சியிலேயே பஸ்ஸில் சிலுமிசம் செய்யும் ரவுடியை நடுரோட்டில் புரட்டி எடுத்து கொத்து பரோட்டா போடுகிறார் அருள்.

முக்கால்வாசி படம் மருத்துவ மனையிலேயே படமாக்கப்பட்டி ருக்கிறது. மருத்துவமனையில் வேலை பார்க்கும் சிலர் நோயாளி களிடம் காட்டும் வெறுப்புணர்வை அப்பட்டமாக சொல்லியிருக்கி றார்கள. அவர்களிடம் பகைத்துக்  கொண்டால் பேஷண்ட் நிலை அதோகதிதான் என்று சொல்லி  யிருப்பது பதற்றத்தை ஏற்படுத்து கிறது.

ஆத்மிகா அழகாக வந்து செல்கிறார். அதிக வேலை ஒன்றுமில்லை.

படத்தின் ஹைலைட் பாரதிராஜா வின் எதார்த்தமான நடிப்பு தான். ஒரு நோயாளியாகவே மாறி யிருக்கிறார்.
படுக்கையில் வயிற்று வலி என்று கதறும் கதறல் வயிற்று வலி வந்தவனுக்குத்தான் அவர் வெளிப்படுத்தும் வலியின் வேதனையை உணர்ந்து கொள்ள முடியும்.

வில்லத்தனம் செய்யும் நான்கு முகங்களும் பயமுறுத்துகின்றன.

நடுரோட்டிலும், கையேந்தி கடையிலும்  ரவுடியை புரட்டி. எடுக்கும்   அருள்நிதி வில்லத் தனம் செய்யும் ரவுடிகளிடம் மட்டும் மாத்து வாங்குவதும் மயங்கி விழுகிறார்…  தானிக்கி தீணி காம்பன் சேட் ஆகவில்லை.

லைகா சுபாஷ்கரன் தயாரித்  திருக்கிறார். படத்தை பரபரப்புடன் வைத்திருக்கிறது சாம் சி எஸ் இசை.

ஒளிப்பதிவில் எக்ஸ்க்ளூசிவ் என்று இல்லாவிட்டா லும் காட்சிகளை தெளிவாக படாக் கியிருக்கிறார் சின்டோ பொது  தாஸ்.

திருவின் குரல்- தந்தை மகன் சென்டிமென்ட்டுடன் கூடிய ஆக்ஷன் கலவை.

Related posts

ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அக்டோபர் 23 வெளியாகிறது

Jai Chandran

அஸ்வின்ஸ் (பட விமர்சனம்)

Jai Chandran

Gevi official contender for 2026 oscars..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend