Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் பொது செய்திகள்

தமிழறிஞர் சாலமன் பாப்பையா திடீர் மரணத்தால் அதிர்ச்சி

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 91.

கடந்த 5ம் தேதி சிவகாசியில் நடந்த சன் டிவி சிறப்பு பட்டிமன்றத்தில் நடுவராக பொறுப்பேற்று நடத்தினார் சாலமன் பாப்பையா. சென்ற 2 நாட்களாக காய்ச்சல் காரணமாக ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் இன்று செப்டம்பர் 11ம் தேதி காலை சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக மதுரையில் காலமானார்;

மதுரையை சேர்ந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 12,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியவர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர்.
திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங் களுக்கு உரை எழுதி இருக்கிறார்.

கடந்த 2000ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் கடந்த இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களோ, இனிய குழந்தைகளே என்றொலிக்கும் கணீர்க் குரலுக்கு சொந்தக்காரரான சாலமன் பாப்பையா புராணங்கள், இலக்கியங்களை பட்டிமன்றங்கள் மூலம் peesi🙏எளிய மக்களின் வாழ்க்கையிலும் அதனை பேச வைத்தவர்.
2021ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்

சாலமன் பாப்பையாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.தமிழறிஞர் சாலமன் பாப்பையா திடீர் மரணத்தால் பல தரப்பினரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவரது மறைவுக்கு அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் திரையுலகினர் உள்ளிட்ட பலவேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழறிஞர் சாலமன் பாப்பையா திடீர் மரணத்தால் அதிர்ச்சி

Related posts

தமிழில் நடிக்க தயார்: கப்ஜா விழாவில் உபேந்திரா

Jai Chandran

Kamal Haasan 40 years of friendship

Jai Chandran

சொட்ட சொட்ட நனையுது (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend