படம்: அஸ்வின்ஸ்
நடிப்பு: வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன், முரளிதரன், உதய் தீப், மெலினா
தயாரிப்பு: பிவிஎஸ்என் பிரசாத்
இசை: விஜய் சித்தார்த்
ஒளிப்பதிவு: ஏஎம் எட்வின் சாகே
இயக்கம்: தருண் தேஜா
பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா
யூடியூபில் பிரபலமாக இருக்கும் அர்ஜுன் ( வசந்த் ரவி ) ரித்விகா( சரஸ்வதி மேனன்) உள்ளிட்ட டீமிற்கு லண்டனில் தனிமை தீவில் உள்ள ஒரு அரண்மனை பங்களாவில் நடக்கும் அமானுஷயங் களை வீடியோ படமாக்கி தரக் கேட்டு வாய்ப்பு வருகிறது. அதை செய்து கொடுத்தால் பெரிய வாய்ப்புகளை தருவதாக கூறப்படுவதால் அர்ஜுன் டீம் துணிவுடன் லண்டன் தீவு பங்களாவுக்கு செல்கிறது. அந்த இடமே அமானுஷ்யம் நிறைந்த பகுதியாகவே அவர்களுக்கு தெரிந் தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாழடைந்த அரண்ம னைக்குள் செல்கின்றனர். உள்ளே நுழைந்தவுடனே அங்கிருக்கும் துஷ்ட சக்தி ஆட்டத்தை தொடங்கு கிறது. ஒவ்வொருவராக அதற்கு பலியாகின்றனர். கடைசியில் மிஞ்சும் அர்ஜுன் தீய சக்தியை எப்படி எதிர்கொண்டு அழிக்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.
தண்ணீரில் மூழ்கி இறந்து விடும் இரட்டை மகன் களை உயிர் மீட்டு தரக் கேட்டு அஸ்வினிகுமாரர் களை வேண்டி தவம் செய்கிறார் தந்தை. அதற்கு மெச்சி தோன்றும் அஸ்வினி குமாரர்கள் இரட்டையரில் ஒரு மகனை மட்டும் தந்து அவனிடம் தெய்வசக்தி மிக்க 2 குதிரை பொம்மை களை கொடுத்து வரம் அளிக்கின்றனர். அதில் ஒரு பொம்மையை ராட்சஷன் ஏமாற்றி வாங்கி மக்களை அழிக்க பயன்படுத்துகிறது இந்த கதைக்கும் மேற்சொன்ன கதைக்கும் என்ன தொடர்பு என்பதை திகில் மிரட்டலுடன் அஸ்வின்ஸ் படம் சொல்கிறது.
தரமணி, ராக்கி படங் களில் நடித்த வசந்த் ரவிக்கு அடையாளம் தரும் படமாக அஸ்வின்ஸ் இருக்கும் எனலாம். கதையும் திரைக்கதையும் புரிந்துகொள்வது எளிதல்ல. படத்தை உன்னிப்பாக கவனித்து பார்த்தால்தான் புரியும்.
காட்சிகள் ஒவ்வொன்றும் திகிலை கிளப்புகிறது. எந்த நேரத்தில் யார் ராட் சாசனுக்கு பலியாவார்கள் என்பதை யூகிக்க முடியாது. ஒரு சமயம் சாகிறார்கள் இன்னொரு சமயம் பேயாக மிரட்டுகி றார்கள்.
காட்சிகள் ஒரு பக்கம் மிரட்டினால் அந்த பழங் கால அரண்மனை இன்னொரு பக்கம் பீதி கிளப்புகிறது. இதில் வசந்த் ரவிக்கு பிரதான வேடம் அதுவும் ஒன்றுக்கு இரண்டு வேடம். என்ன வேடம் என்பது இப்போ தைக்கு சஸ்பென்ஸ். அதேபோல் விமலா ராமன் வேடமும் பரபரப்புக்கு பரபரப்பு சேர்க்கிறது.
படத்தில் நடிப்பு, காட்சி களை தூக்கி நிறுத்துவது விஜய் சித்தார்த் அமைத்தி ருக்கும் அதிரடி இசை தான். பெரிய ஸ்கிரினில் சவுண்ட் எபெக்ட்டுடன் படம் பார்க்கும் எப்பேர்பட்ட தைரியசாலியும் ஒரு முறையாவது அலறிவிடு வார்.
இயக்குனர் தருண் தேஜா திகில் படத்தை இயக்கி இருந்தாலும் மனித மூளையில் இருக்கும் இரண்டு எண்ணங்கள் அதாவது நல்ல எண்ணம் கெட்ட எண்ணம் பற்றி சொல்லி பயங்களை துரத்த தரும் அட்வைஸ் பாராட்டுக்குரியது.
பிவிஎஸ்என் பிரசாத் தயாரித்திருக்கிறார்.
ஏஎம் எட்வின் சாகே ஒளிப்பதிவும் பக்கா மாஸ்.
அஸ்வின்ஸ் – அலறவிடும் அமானுஷ்யம்.

