Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வெள்ளிமலை (பட விமர்சனம்)

படம்: வெள்ளிமலை

நடிப்பு: சூப்பர் குட் ஆர். சுப்ரமண்யன், வீர சுபாஷ், அஞ்சு கிருஷ்ணா , கிரிராஜ், விஜயகுமார் , சார்லஸ் பாண்டியன், கவிராஜ் ,
பழனிச்சாமி

தயாரிப்பு: ராஜகோபால் இளங்கோவன்

இசை: என். ஆர். ரகுநந்தன்

ஒளிப்பதிவு: மணிபெருமாள்

இயக்கம்: ஓம் விஜய்

பி ஆர். ஓ: சுரேஷ் சந்திரா ரேகா (D’One), நாசர்

மேல் வெள்ளிமலை, கீழ் வெள்ளிமலை பகுதியில் உள்ள இரண்டு ஊர் கிராம மக்கள் ஒரு பிரச்னை ஏற்பட்டு விரோதிகளா கின்றனர். கீழ் வெள்ளிமலையில் போகர் பரம்பரையை சேர்ந்த மருத்துவர் இருக்கிறார். ஆனால் அவரிடம் கிராம மக்கள் மருத்துவம் பார்க்க மறுக்கின்றனர். இந்நிலையில் தீர்க்க முடியாத ஒரு நோய் ஊர் மக்களிடம் பரவுகிறது. அதில் ஒரு நபருக்கு மருத்துவர் வைத்தியம் அளித்து குணப் படுத்துகிறார் .  அதைக்கண்டு கிராம மக்கள் அனைவரும் சிகிச்சை பெற வருகின்றனர். ஆனால் மருத்துவர் எடுத்த முடிவு என்ன? அதன் விளைவு என்ன என்பதை கிளைமாக்ஸ் விளக்கு கிறது.

நவீன மருத்துவ
யுகத்தில் மறக்கடிக்கப்பட்டு வரும் நாட்டு வைத்திய முறைக்கு உயிர் கொடுக்கும் படமாகவும், நாட்டு மருத்துவத்தால் எந்த வித நோயையும் குணப்படுத்த முடியும் என்பதை சொல்லும் படமாகவும் இப்படத்தை இயக்கியுள்ளார் ஓம் விஜய்.

போகர் பரம்பரையில் வந்த மருத்துவராக சூப்பர்குட் சுப்ரமணி நடித்துள்ளார். பக்கா கிராமத்து வைத்தியவர் போலவே மாறி நடித்திருக்கிறார். தன்னிடம் மருந்து இருந்தும் ஊர் மக்கள் யாரும் அதை வாங்கி சாப்பிட வராததை  எண்ணி கலங்குவதும்,  ஒரு கட்டத்தில் ஊர் மக்கள் மருந்து வாங்கி சாப்பிட தயாராக இருந்தும் அவர்களுக்கு போதுமான மருந்து தர முடியாமல் கண்கலங்குவது மாக சுப்பிரமணி  இயல்பான நடிப்பில் கவர்கிறார். ஆனால் அவர்  300  கிலோ எடை கொண்ட வாலிப கல்லை தூக்கி செல்வது  தான் எப்படியென்று தெரிய வில்லை.

போகர் என்ற பாத்திரத்தில் ஜடாமுடியுடன் சுப்ரமணி வரும்  சித்தர் தோற்றம் ஏக பொருத்தம்.  வயதான காலத்திலும் மலை மேடுகளில் ஏறி இறங்கி  நடந்து கடின உழைப்பு தந்திருக்கிறார்.

ஹீரோவாக வீர சுபாஷ் ஹீரோயி  னாக அஞ்சு கிருஷ்ணா நடித்துள் ளனர்.  மலைக்கிராம ஜோடிகளாக வே இவர்கள்  வாழ்ந்திருக்கின் றனர்.

உயரமான மரத்தில் கொஞ்சமும் பயமில் லாமல் அமர்ந்திருக்கும் அஞ்சு கிருஷ்ணா  மீது கிராமத்து பெண் மணம் வீசுகிறது.

ஹீரோ என்பது தெரியாத வகையில்  ஊர் மக்களில் ஒரு இளைஞனாக வீர சுபாஷும் கலந்திருப்பது இயல்பான நடிப்பு.

கமர்ஷியல் பட அணி வகுப்பு மத்தியில் நாட்டு மருத்துவ மகிமையை யும் போகர் சித்தரின் பெருமையைnசொல்லும் படமாகவும் இதனை  தயாரித்திருக் கிறார் ராஜகோபால் இளங்  கோவன்.

தென்றலுடன் தெய்வீக ராகங்கள் கலந்து தரும்  இசை அமுதை படைத்திருக்கிறார் இசை அமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கே ரசிகர்களை சுற்றுப் பயணம் அழைத்துச் சென்றிருக்  கிறார் ஒளிப்பதிவாளர்
மணிபெருமாள்.

போகர் சித்தரின் அருள் வாக்குப்படி இப்படத்தை இயக்கிய தாக இயக்குனர் ஓம் விஜய் கூறும் போது போகரின் அருளாசி இப்படத்துக்கு கிடைக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.

மூலிகை மகத்துவம் பற்றிய என்பதால் வெளிப்படையாக சொல்லத்தக்க சில மூலிகை குறிப்புக்களை ஒரு பாடலாக தந்திருந்தால் பிளஸ் ஆகயிருந் திருக்கும்.

வெள்ளிமலை – நாட்டு மருந்து மகத்துவம்.

Related posts

எட்டர்னல்ஸ் (பட விமர்சனம்)

Jai Chandran

ஷாருக்கின் ‘ஜவான்” படத்தின் முதல் பாடல் “வந்த எடம்”

Jai Chandran

90s Tamil Television Stars’ Reunion

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend