Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் (பட விமர்சனம்)

படம்: சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

நடிப்பு: சிவா, மா பா கா, மனோ, அஞ்சு குரியன், மேகா ஆகாஷ், ஷா ரா, திவ்யா கணேஷ், பக்ஸ், மொட்டை ராஜேந்திரன்

தயாரிப்பு: லார்க் ஸ்டுடியோஸ் கே குமார்

இசை: லியோன் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு: ஆர்தர் வில்சன்

இயக்குனர்: விக்னேஷ் ஷா

ரிலீஸ் : 11.11 புரடக்க்ஷன் டாக்டர் பிரபு திலக்

பி ஆர் ஓ: யுவராஜ்

என்ஜினியரிங் படித்தி ருக்கும் சிவா உணவு டெலிவரி செய்யும் பாயாக வருகிறார். மாத சம்பளத்துக்கு வேலை செய்யும் அவருக்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு செல் போன் கிடைக்கிறது. அதில் வரும் சிம்ரன் என்ற டிஜிட்டல் பெண் சிவா மீது காதல் கொள் கிறாள். சிவாவை பலவித கேம்களில் ஜெயிக்க வைத்து கோடீஸ்வரனாக்குகிறாள். ஆனால் சிவாவுக்கு வேறு பெண் மீது காதல் வருகிறது. அவள் பின்னாலேயே சுற்றி அவளின் காதலையும் பெறுகிறார். அதைக் கண்டு கோபம் அடையும் சிம்ரன் அவர்கள் இருவரின் காதலை பிரிக்க பல வித்தைகள் காட்டுகிறாள். இதற்கி டையில் நுண்ணறிவு போனை கண்டுபிடித்த நபர் அந்த போனை அழிக்க முயற்சிக்கிறார். கோபம் அடையும் சிம்ரன் டிஜிட்டல் ஆயுதங்கள் ஏவி அவர் களை அழிக்க முயல் கிறாள். அடுத்து நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் காமெடி விருந்துடன் பதில் அளிக்கிறது.

எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோதான் இப்படத்தின் இன்ஸ்பி ரேஷன். சிட்டி ரோபோவை சின்ன பட்ஜெட் ஸ்மார்ட்போன் சிம்ரனாக்கியிருக்கிறார்கள்.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு கொண்ட செல்போன் கதை என்று டெக்னிக் கலாக ஒரு வார்த் தையை சொல்லி அள்ளி விட்டிருக்கிறார் இயக் குனர்.

முதலில் சிவா சொல் வதையெல்லாம் செய்யும் டிஜிட்டல் பெண் பின்னர் அவருக்கு எதிராக திரும்பி அவரிடம் இருக்கும் பணத்தையெல்லாம் கரைய வைத்து கடனாளியாகி 4 சவரன் தங்க பதக்கத்துக்காக அலைய விடுவது காமெடி.

காமெடி நாயகன் சிவா தன் இஷ்டத்துக்கு நடனமாடியும் பந்தாவாக பேசியும் காமெடி செய்வது வழக்கம் அதை இப்படத்திலும் தனது பாணியில் செய்து கலகலக்க வைக்கிறார்.

“டான்ஸ்ல எதனா டவுட்டிருந்தா என்னய கேட்டிருக்கலாம் இல்லையா” என்று மா கா பா ஆனந்திடம் கொஞ்சமும் நா கூசாமல் சொல்லும் சிவா குபீர் சிரிப்பை வரவழைக்கி றார். கொஞ்சம் விட்டால் இவர் பிரபுதேவாவுக்கே நடனத்தில் டவுட் தீர்த்து வைப்பார்போலிருக் கிறது.

மேகா ஆகாஷ் செல் போன் பாவையாக வருகிறார். நின்ற இடத்திலேயே நடிக்க வேண்டிய காட்டாயமி ருந்தாலும் குழந்தைத் தனமாக நடித்து கவர் கிறார்.

சிவாவின் காதலியாக வரும் அஞ்சுகுரியனுக்கு அதிக வேலையில்லை.

கிளைமாக்சில் வந்து தலை காட்டுகிறார் மொட்டை ராஜேந்திரன்.

பின்னணி பாடகர் மனோ சிவாவின் தந்தையாக வருகிறார். போனில் ஜொள்ளுவிட்டு காதலிப் பதும் காதலுக்காக மதம் மாறுவதும் வயிற்றை பதம் பார்க்கும் காமெடி.

என்ன மெசேஜ், என்ன லாஜிக், என்ன மேஜிக் என எந்த கேள்வியும் கேட்காமல் படத்தை பார்த்தால் ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம்.

கதைக்கும் இயக்குனர் ஷங்கர், நடிகை சிம்ரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

லார்க் ஸ்டுடியோஸ் கே.குமார் தயாரித்திருக் கிறார்.

லியோன் ஜேம்ஸ் இசை சோடையில்லை

ஆர்தர் வில்சன் கேமரா தெளிவாக காட்சிகளை படமாக்கியுள்ளது.

புது இயக்குனர் விக்னேஷ் ஷா ஏற்கனவே தான் இயக்கிய ‘ஐபோன் ஸ்ரீயும் அயனாவரம் ரவியும் என்ற குறும்ப டத்தை தற்போது சி. ஷங்கர் ஸ்மார்ட் சிம்ரனும் என்ற திரைப்படமாக இயக்கி யுள்ளார் . லாஜிக் பாக்காதீங்க என்று டைட்டிலில் போடுவதால் விமர்சகர்களிடமிருந்து தப்பிவிடுகிறார்.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் – குழந்தைகளுடன் பார்க்க..

Related posts

இந்தியாவின் முன்னணி நடிகர் ஆவார் சிம்பு : இயக்குனர் சுசீந்திரன் பாராட்டு

Jai Chandran

விஜய் சேதுபதி இயக்குனரின் கொரோனா குமார்

Jai Chandran

கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend