Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

உடன்பால் (பட விமர்சனம்)

படம்: உடன்பால்

நடிப்பு: லிங்கா, அபர்நிதி, விவேக் பிரசன்னா, சார்லி, காயத்ரி, தனம், தீனா, மாஸ்டர் தர்ஷித் சந்தோஷ், எஸ்.மான்யஸ்ரீ, மயில்சாமி

தயாரிப்பு:கே.வி.துரை

இசை: சக்தி பாலாஜி

ஒளிப்பதிவு: மதன் கிறிஸ்டோபர்

இயக்கம்: கார்த்திக் சீனிவாசன்

பி ஆர் ஒ: சதீஷ் ( AIM))

ர்ிலீஸ்: ஆஹா தமிழ் ஒரிஜினல்

 

விநாயகயத்தின் (சார்லி) மகன் பரமன் (லிங்கா) , மகள் கண்மணி ( காயத்ரி). பரமன் மனைவி பிரேமா (அபர்ணிதி), கண்மணி கணவர் முரளி ( விவேக் பிரசன்னா). பரமன், கண்மணிக்கு பணத் தேவை அதிகரிக்கிறது. வீட்டை விற்று பணம் தரும்படி தந்தை விநாயகத்திடம் கேட்கின் றனர். அவர் மறுத்து விடுகிறார். காம்ப்ளக்ஸ் ஒன்றுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு செல்கிறார் விநாயகம். அந்த காம்ப்ளக்ஸ் இடிந்து விழுகிறது. இடிபாட்டில் சிக்கி பலர் இறக்கின்றனர். அதில் இறந்தவர்களுக்கு ரூ 20 லட்சம் நஷ்ட ஈடு தருவதாக அரசு அறிவிக் கிறது. அந்த பணத்தை பெற்று பங்குபோட பரமன், கண்மணி முடிவு செய்கின்றனர். திடீரென்று விநாயகம் உயிருடன் வந்து நிற்பதால் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் சிறிது நேரத்தில் விநாயகம் இயற்கை மரணம் அடைகிறார். அப்போது பரமன் புது ஐடியா செய்கிறார். அதன்படி  தந்தை பிணத்தை காம்ப்ளக்ஸ் இடிபாடுகளில் போட்டுவிட்டு அதன் மூலம் அரசின் நஷ்டஈடு பெற குடும்பமே திடடமிடு கிறது. அடுத்து நடப்பது என்ன என்பதை படம் கலகலப்பாக வும், திக் திக்குடனும் சொல்கிறது.

பணத் தேவைக்காக ஒரு நடுத்தர குடும்பத்தில்  நடக்கும் கதையை சென்டிமென்ட், நகைச்சுவை, சஸ்பென்ஸ் கலந்து சொல்லியி  ருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சீனிவாசன்.

படத்தில் நடித்திருக்கும் சார்லி உள்ளிட்ட அத்தனைபேரும் குடும்ப உறவுகளாகவே வாழ்ந்திருக்கின்  றனர். வீட்டுக்கு வரும் காயத்ரியை அவரது அண்ணி அபர்ணிதி வரவற்க காயத்ரியோ முறைப்பாக அவரிடம் பேசுவதும் பின்னர் அந்த கோபத்தை கணவன் லிங்காவிடம் அபர்ணிதி காட்டுவதும் எதார்த்த மாக நடக்கும் குடும்ப சிணுங்கல்கள்.

வீட்டை விற்று பணம் தரும்படி சார்லியிடம் காயத்ரியும், லிங்கா வும் நைசாக் பேசி வழிக்கு வரவைக்க பார்ப்பதும் சார்லியோ, ” வீட்டை விற்றுவிட்டால் எல்லோரும் நடுரோட்டில் நிற்பீர்களா?” என்று பதிலடி கொடுத்து மற்றவர்கள் வாயை அடைப்பதும் பல குடும்பங் களில் அடிக்கடி நடக்கும் நிஜகாட்சிகள்.

பழைய கட்டிடமம்  இடிந்து விழுந்து சார்லி இறந்தால் அதற்காக அரசு தரும் 20 லட்சம் நஷ்ட ஈடு தொகையை அறிவிப்பை எதிர் பார்த்து லிங்கா, தங்கை காயத்ரிக்குள் நடக்கும் பங்கு பிரிப்பு தகராறு சுவாரஸ்யமாக நிகழ்கிறது. இவ்வளவு திட்டம் போடும் இவர்கள் ஏமாறத்தான் போகிறார்கள் என்று ஆடியன்ஸ் நினைப்பது சார்லி உயிரோடு வந்து வாசலில் நிற்கும்போது நிஜமாகிறது. இத்துடன் இந்த சீன் முடியும் என்று பார்த்தால் சார்லி இயற்கை மரணம் அடைய மீண்டும் அனுமார்வால் போல் 20 லட்சம் பங்கு பிரிக்கும் தகராறு ஆரம்பாகி விடுகிறது. இதில் கூடுதலாக இன்னொரு மகனும் சேர்ந்துக் கொள் கிறார்.

சார்லி உடலை பிரியாணி அண்டாவில் மறைத்து குடும்பமே சேர்ந்து தூக்கிச் செல்ல போராடுவது நகைச் சுவையாக படமாக்கியிருப்பது ரிலாக்ஸ்.
விவேக் பிரசன்னா காமெடி சேட்டைகள் குபீர் சிரிப்பு.

சார்லியின் குணசித்ர நடிப்பு அவரது அனுபவத்தை சொல்  கிறது. பிரியாணி அண்டாவுக்குள் காலை சுருட்டிக்கொண்டு எப்படித் தான்படுத்தாரோ மனுஷன்?  நினைத்தால் நம் கால்கள் வலிக்கிறது.

திடீர் என்ட்ரி கொடுக்கும் மயில்சாமி கேரக்டர் அந்தரத்தில் நிற்கிறது.

இடிந்த கட்டிட பகுதியில் உள்ள ஆம்புலன்சில் சார்லி உடலை வைத்தும் அது மார்ச்சுவரிக்கு செல்லாமல் சுடுகாட்டுக்கு செல்வது ஏன் என்பதற்கு விளக்கம் இல்லை. சார்லியின் உடல் சுடுகாட்டில் அனாதையாக விடப்படுவதும் சரியான தீர்வாக இல்லை.  ஆனாலும் ஒரு செமேஜ் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சீனிவாசன். “உன் அப்பாவை நீ எப்படி பாத்துக்  கிட்டியோ அப்படித்தான் உன்னை நான் பாத்துக்குவேன்” என்று லிங்காவின் மகன் நெத்தியடியாக தந்தையை பார்த்துச் சொல்வது சரியான சவுக்கடி.

கே.வி.துரை தயாரித்திருக்கிறார்.

சக்தி பாலாஜி இசை சீன்களை தின்று விடாமல் இதமாக ஒலிக் கிறது.

மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு நடுத்தர குடும்ப சூழ்லை மனதுக்குள் பதிய வைக்கிறது.

உடன்பால் – பிள்ளைகளின் வெளி வேஷம்.

Related posts

யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்..

Jai Chandran

Glimpse of Chellamma from Doctor is here

Jai Chandran

Unique musical concert RRR in Chennai

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend