Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டியர் டெத் (பட விமர்சனம்)

படம்: டியர் டெத்

நடிப்பு: சந்தோஷ் பிரதாப், மணிபோஸ், வசந்த், பிரியா, வெங்க டேசன், பிரணவ் லோகேஷ்வரன், ராஜேஷ்குமார், புருஷோத்தமன், தியாகு, ஸ்ரீதர், சரோஜா, கஜேந்திரம்மாள், ஜெய லட்சுமி, ஜெகநாதன், ராஜேஷ், சந்தோஷ் நாகராஜன், முத்தமிழ் , ஜுவி ஆர்த்தி மற்றும் பலர்

தயாரிப்பு: ஐஸ்வர்யா தியாகராஜன், சதீஷ் நாகராஜன்

இசை:நவீன் அண்ணா மலை

ஒளிப்பதிவு : அசோக் சுவாமிநாதன்

இயக்கம்: பிரேம்குமார்

பி ஆர் ஒ: கே எஸ். கே.செல்வா

டியர் டெத் என்ற டைட்டிலே சிலரை பயமுறுத்தும். அந்த பயத்தை போக்குவது தான் கதையின் முக்கிய கரு.

மொத்தம் 4 தனித்தனி கதைகளாக அமைக்கப் பட்டாலும் ஒன்றுக் கொன்று தொடர்பில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது சங்கிலி தொடர் அறுபடாமல் இருப்பதை உணரமுடிகிறது.

நான்கு கதையில் தலா ஒரு மரணம் என்று வகைப்படுத்தி அது இயற்கையாக நிகழ்கிறதா அல்லது மற்றவாரால் நிகழ்கிறதா, அலட்சியத்தால் நிகழ் கிறதா என்று வெவ்வேறு களத்தில் படமாக்கி அதை மரணமே நேரில் சொல் வதுபோல் அமைத்தி ருப்பது புதுசா ஏதோ சொல்லியி ருக்காங்கப்பா என்று சொல்லத் தோன்றகிறது.

தொடக்க காட்சியில் வவ்வாள் போல் வந்திறங்கும் உருவத்தை பார்த்ததுமே பார்வையை தன் பக்கம் இழுக்கிறது காட்சி. திடீரென்று அந்த பறவை சந்தோஷ் பிரதாப்பாக மாறி, “நான் யார் தெரிகிறதா? நான் தான் மரணம்” என்று அறிமுகப்படுத்திக் கொள்வது திடுக்.

முதல் கதையில் கொரோனா வைரஸால் மனைவியை பறிகொ டுக்கும் கணவன் மார்சு வரியில் கதறி அழும்போது கலங்க வைக்கி றார்.

படுக்கையில் கிடக்கும் தனது தாய் சிறுநீர் கழிப்பதை முகம் சுழிக் காமல் துடைத்து மெழுகி எடுக்கும் அந்த பெரியவர் வெங்கடேசன் எல்லோரையும் நடிப்பில் மிஞ்சி விடுகிறார்.

தாயை கவனித்துக் கொள்ள மறுக்கும் சக உடன்பிறப்புக்கள் பற்றியும், நடுரோட்டில் பாட்டியை கொண்டு போய் வீசும் பேரனும் தங்களின் சுயநலத்தை பட்டவர்த் தனமாக அம்பலப்படுத்தி ஆடியன்ஸின் கோபத்துக்குள்ளா கின்றனர்.

ஒன்றாக பள்ளி பருவத்தில் சுற்றும் நான்கு நண்பர்கள் பின்னர் வாழ்க்கைப் பாதையில் ஆளுக் கொரு திசையாக சென்றாலும் நட்பு மட்டும் மாறாமல் பயணிப்பது பசுமை நினைவுகள். இவர்களில் ஒருவர் மரணத்தின் பிடியில் வீழ்வது எதிர்பாராத ஷாக்.

நடித்திருக்கும் எல்லோரும் புதுமுகம் என்பதால் மரண கேரக்டரில் தெரிந்த முகம் சந்தோஷ் பிரதாப்பை நடிக்க வைத்து சினிமா உணர்வை தர இயக்குனர் முயன்றாலும் நான்கு கதைகளும் ஸ்லோமோஷனில் நகர்ந்து  டாகுமென்டிரி படமாகவே பதிகிறது.

“பயந்தவர்களை நான் சீககிரம் நெருங்குவேன்” என்று மரணமே வாக்கு மூலம் தருவது பயந்த சுபாவம் உள்ளவர்களை நெஞ்சடைக்கச் செய்யும்.

வில்லனாக நடிப்பதற்கே பல ஹீரோக்கள் தயங்குவார்கள் ஆனால் மரணம் என்ற கதாபாத்திர மாக நடிக்க சந்தோஷ் பிரதாப் ஒப்புக்கொண்டது அவரது துணிச்சலின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.

ஐஸ்வர்யா தியாக ராஜன், சதீஷ் நாகராஜன் தயாரித்திருக்கின் றனர்.

நவீன் அண்ணாமலை இசை டைட்டிலிலேயே சங்கு முழங்கி சாவு மேளமடித்து திகிலை கிளப்பு கிறது.

அசோக் சுவாமிநாதன் ஒளிப்பதிவு சோடையில்லை. மரண கதா பாத்திரத்துக்கு கூலிங் கிளாஸ் மாட்டி அதை கழற்றியதும் சிவப்பு விழிகள் காட்டுவதும் பின்னர் வரும் காட்சிகளlல் அந்த சிவப்பு விழியை பின்பற்றாதது கன்டினி யூட்டி மிஸ்ங்க் காகியிருப்பது போல் தெரிகிறது.

ஸ்ரீதர் வெங்கடேசன் கதை திரைக்கதை எழுதியுள்ளார்.

பிரேம்குமார் இயக்கி யுள்ளார். கதாபாத்திரங் களை புதுமுகங்  களாக அமைத்திருப்பது பலம்.

டியர் டெத்- விருது பட்டியலில் இடம் பிடிக்கும்.

Related posts

எடர்ணல்ஸ்:இந்திய திருமண காட்சிகள், ஏஞ்சலினா ஜோலி,

Jai Chandran

Sai Pallavi Joins Geetha Arts #NC23

Jai Chandran

கருணாஸின் ” ஆதார்” பட ஆடியோ, ட்ரைலர் விழாவில் பரபரப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend