Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கலகத் தலைவன் (பட விமர்சனம்)

படம்: கலகத் தலைவன்

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், நிதி அகர் வால், கலையரசன், ஆரவ்,  அங்கனாராய், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், அனுபமாகுமார், ஜீவா ரவி

தயாரிப்பு: ரெட் ஜெயன்ட் மூவிஸ்  உதயநிதி ஸ்டாலின்

இணை தயாரிப்பு: எம்.செண்பக மூர்த்தி, ஆர்.அர்ஜூன் துரை

இசை:  ஸ்ரீகாந்த் தேவா, அரோல் கரோலி

ஒளிப்பதிவு: கே. தில்ராஜ்

இயக்கம்: மகிழ் திருமேனி

பி. ஆர். ஒ: சதீஷ் (AIM)

பரிதாபாத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனம அதிக மைலேஜ் தரக்ப கூடிய டிரக்கை தயாரிக் கிறது.  ஆனால் அது நிர்ணயிக்கப்பட்ட மாசு கட்டுப்பாடு குறியீட்டை தாண்டி புகை வெளி யிடும்  என்று தெரிய வருவதால் அதற்கு அனுமதி கிடைக்காது  என்ற நிலை ஏற்படு கிறது. இதை நிறுவன அதிபர் மறைக்கிறார். ஒரு கட்டத்தில்  அந்த ரகசியம் அம்பலமா கிறது. இதனால் டிரக்கை அறிமுகப்படுத்த அனுமதி மறுக்கப்படு கிறது. கார்ப்பரேட் ரகசியத்தை திருடி விற்றது யார்  என்பதை கண்டுபிடிக்க ஒரு நபரை  (ஆரவ்)   நிறுவன அதிபர் நியமிக்கிறார்.  கார்ப்ப ரேட் நிறுவனங்களின்  இந்த மோசடிகளை அம்பலப்படுத்த திரு (உதயநிதி) திட்டமிட்டு  ரகசியங்களை கைப் பற்றும் விவரம் கார்ப்  பரேட் நியமித்த நபருக்கு தெரியவர அதை கண்டு பிடித்து அழிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறார். படிப்படியாக திருவை நெருங்கி அவரை கொல்ல  முயல்கிறார். இதிலி ருந்து திரு தப்பித்தாரா என்பதற்கு ஆக்ஷன்  அதிரடியாக கிளை மாக்ஸ் பதில் சொல்கிறது.

அன்டர்கரண்ட் ஆக்‌ஷன் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் திரு என்ற பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

அரசுக்கு சொந்தமான பொது துறை நிறுவனத்தை எங்கோ ஒரு  கார்ப் பரேட் நிறுவனத்துக்கு விற்பதன் மூலம்  இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான  தொழிலாளர்கள் வேலை இழந்து தெருவுக்கு வரும் அவலத்தை இயக்குனர் மகிழ் திருமேனி அம்பபடுத்தியிருக்கிறார். அதை தனது அமைதியான நுணுக் கமான நடிப்பில் வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார் உதயநிதி.

கிளைமாக்ஸில் ஆரவ் விடம் மோதி அவரை புரூஸி சொன்ன பார்முளாபடி மூன்றே தாக்குதலில் கராத்தே பஞ்ச்விட்டு வீழ்த்துவது எதிர்பாராத ஷாக்.

ஹீரோயின் நிதி அகர்வாலுடன் மென்மையான காதலை வெளிப்  படுத்தி ஜென்டிலாக நடந்து கொள்ளும் உதயநிதி கதாபாத்  திரத்தின்  கண்ணியம் காக்கிறார்.

அழகு தேவதையாக வருகிறார் நிதி அகர்வால். உதயநிதியின் புத்திசாலித்தனமான பேச்சில் கவரப்படும் நிதி  அகர்வால் பின்னர் அவரை காதலிக்க தொடங்குவதும்  இறுதியில் கிராமத்து மக்களின் சேவைக்காக காதலை தியாகம் செய்ய துணிவதும் நிதி அகர்வாலின்  கதாபாத்திரத்தை கனமாக்கு கிறது.

கார்ப்பரேட் ரகசியத்தை திருடுப வர்களை  கண்டுபிடிக்க வரும் கேரக்டரில் வில்லத்தனத்தை விளாசி தள்ளியிருக்கிறார் ஆரவ். நூல் பிடித்தார் போல் வரிசையாக கார்ப்பரேட் ரகசியத்தை திருடுப வர்களை கண்டுபிடித்து சித்ரவதை செய்வது பயமுறுத்துகிறது. குறிப்பாக ரயில் நிலையத்தில் கைமாறும் கார்ப்பரேட் ரகசிய சம்வத்தை கண்டுபிடிக்க ஆரவ் ஆட்கள் உதயநிதியின் ஆட்களை   சுத்துபோடுவதும்  அந்த வலையி லிருந்து சாதுர்யமாக உதயநிதி தனது ஆட்களை தப்பச் செய்வதும்  பரபரப்பு.

ரெட் ஜெயன்ட் பிலிம்ஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக் கிறார்.

கார்ப்பரேட் கம்பெனிகளின் முறை  கேடுகளையும் அவர்களால் அரசும், அரசியல் கட்சிகளும் விலைக்கு வாங்கப்படுவதையும்  தோலுரித் திருக்கிறார் மகிழ் திருமேனி

ஸ்ரீகாந்த் தேவா, அரோல் ரோலியின் பாடல் இசையும் ரீ ரிக்கார்டிங்கும் படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது.

கே.தில்ராஜ் ஹாலிவுட் பாணியில் காட்சிகளை ஒளிப்பதிவு  செய்தி ருக்கிறார்.

கலகத் தலைவன் – கார்ப்பரேட்  சதிகளை  துணிச்சலாக அம்பலப்படுத்துகிறது.

Related posts

Prabhas, Pooja’s “Radhe Shyam” On 11th March

Jai Chandran

Kamalhaasan Producing Sivakarthikeyan’s New Movie AMARAN

Jai Chandran

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் Vs  விஜய்சேதுபதி  800 பட சர்ச்சைக்கு நடிகர் நன்றி வணக்கம் சொல்லி விலகல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend