Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பூமிகா – யோகி பாபு – கே எஸ் ரவிக்குமார் இணையும “ஸ்கூல்”

 

குவாண்டம் பிலிம் பேக்டரி (Quantum Film Factory) என்ற பட நிறுவனம் சார்பில் ஆர் வித்யாதரன் மற்றும் கே. மஞ்சு இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ” ஸ்கூல்” (School )
இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள். மற்றும் பக்ஸ், சாம்ஸ் ஆகியோருடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிகவிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ஆதித்யா கோவிந்தராஜ். எடிட்டிங் ராகவ் அர்ஸ். கலை விஜய் ஐயப்பன். ஸ்கிரிப்ட் கன்சல்டண்ட் வி. நிவேதா. தயாரிப்பு மேற்பர்வை  கலை. உடைகள் பாண்டியன். மேக்கப்  சீனு. விளம்பர வடிவமைப்பு சதீஷ் ஜே .மக்கள் தொடர்பு  மணவை புவன் தயாரிப்பு ஆர்.கே. வித்யாதரன், கே மஞ்சு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குக்கிறார் ஆர். கே . வித்யாதரன்.

இது முழுக்க முழுக்க ஸ்கூலில் நடக்கும் கதை. ஒரு உளவியல் ரீதியான திரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ, மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை ,தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங் களை பற்றி அலசி ஆராயும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள் ளோம்.

அதே நேரத்தில் மனித உயிரின் பிரயாணத்தை பற்றியும் ஆவிகள் பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் பற்றியும் மிக தீவிரமாக சொல்லவி ருக்கிறோம்.

மாணவ மாணவிகளை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்யும் ஆசிரியராக பூமிகாவும் மாணவர் களை எளிமையாக பழகி அவர் களை நல்வழிக்கு நடத்திச் சொல்லும் ஆசிரியராக யோகி பாபுவும், ஸ்கூலில் நடக்கும் க்ரைம் சம்பவங்களை இன்வேஸ்டி கேஷன் செய்யும் போலீஸ் ஆபீஸராக கே எஸ் ரவிக்குமாரும் principal ஆக பாக்ஸும் சாம்சும் நடிக்கிறார்கள்.

கன்னட திரை உலகில் உபேந்திரா வைத்து கனவில் நடக்கும் சம்பவங்களை Thriller-ஆக News திரைப்படத்திலும், வைத்தீஸ்வரன் திரைப்படத்தில் மறுஜன்மத்தை பற்றி ஆராயும் விதமாக சொல்லியது போல் இந்தப் படத்தில் சமூக நம்பிக்கை களையும் ஆவிகள் உலகத்தில் நடக்கும் மன மாற்றங்களை பற்றி சொல்லவிருக்கிறார்.

படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கே. எஸ். ரவிகுமார், பாக்யராஜ், யோகிபாபு, சாம்ஸ் மற்றும் படத்தில் நடிக்கவிருக்கும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படப்பிடிப்பு துவங்ககியாது.

Related posts

NETFLIX’S THE GRAY MAN TRENDS AS DHANUSH’S RESPONSE

Jai Chandran

A Film based on iconic writer Perumal Murugan’s short story

Jai Chandran

India’s biggest superstar Prabhas’ 25th film is around the corner..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend