Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

யூகி (பட விமர்சனம்)

படம்: யூகி

நடிப்பு: கதிர், நட்டி, நரேன், ஆனந்தி, பவித்ரா, ஆத்மிகா, பிரதாப்போத்தன்

தயாரிப்பு: யு ஏ என் பிலிம் ஹவுஸ் ராஜாதாஸ் குரியாஸ்

இசை: ரெஞ்சின் ராஜ்

ஒளிப்பதிவு: புஷ்பராஜ் சந்தோஷ்

இயக்கம்: ஜாக் ஹாரிஸ்

ரிலீஸ்: 11:11 புரடக்‌ஷன் பிரபு திலக்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா (D’ one)

விபத்தில் உயிருக்கு போராடும் தன் கணவரின் உயிரை காக்க பணம் இல்லாமல் தவிக்கும் ஆனந்திக்கு நடிகர் ஒருவரின் குழந்தைக்கு வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்றுத் தந்தால் கணவரின் மருத்துவ செலவை ஏற்பதாக நடிகர் தரப்பில் கூறப்படுகிறது. அதற்கு சம்மதிக்கும் ஆனந்தி திடீரென்று காணாமல் போகிறார். அவரை தேடும் பணி ஒரு பக்கம் நடக்க இதற்கிடையில் பலவேறு சம்பவங்கள் நிகழ்கிறது. பல மர்ம மரணங்களும் நடக்கிறது. ஆனந்தி கிடைத்தாரா? கொலைகள் நடப்பது ஏன்? கொலையாளி யார் என்ற கேள்விகளுக்கு கிளை மாக்ஸ் பதில் அளிக்கிறது.

முதல் காட்சியிலேயே கதை தொடங்கி விடு கிறது. கண்ணீருடன் சாலையில் நடந்து வரும் ஆனந்தியை மர்ம கார் வந்து அழைத்துச் செல்கிறது.

தன் மகள் காணாமல் போய்விட்ட. தாக கூறும் பிரதாப் போத்தன் அவரை ரகசியமாக தேடி கண்டு பிடிக்கும்படி டிடெக்டிவ் நரேனிடம் பொறுப்பு கொடுத்ததும் அவர் தேடுதல் வேட்டையை தொடங்கி விடுகிறார்.
மற்றொரு புறம் நட்டி, கதிர் ஆகியோரும் தேடுகின்றனர் ஆனால் ஒரு துப்பும் கிடைக்காத போது என்னதான் ஆனார் ஆனந்தி என்ற கேள்வியை அரங்கு முழுவதுமே பரபரப்பாக்குகிறது.

நட்டி, கதிர், நரேன், ஆனந்தி, பவித்ரா என எல்லா பாத்திரங் களுமே ஒரு வகையில் சஸ்பென் ஸாகவே கடைசி வரை நகர்வதும் இறுதியில் ஒவ்வொரு வரும் யார் யாரென்று தெரிய வரும்போது ஆச்சரியம் மேலிடுவதையும் தவிர்க்க முடியவில்லை.

ஆனந்தியை தேடி ஆதாரம் கிடைக்காத நிலையிலும் சளைக்  காமல் நரேன் தேடுவதும், பவித்ரா லட்சுமியை தனது மனைவி என்று கூறி அவருக்கு கதிர் பணிவிடை செய்வதும், சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு நட்டி தேடுதல் வேட்டை நடத்துவதும் இடியாப்ப சிக்கலில் கொண்டு காட்சிகளை நிறுத்துகிறது. அவற்றை ஒவ்வொரு முடிச்சாக இரண்டாம் பாதியில் அவிழ்ப்பது சுவாரஸ்யம். கொஞ்சம் கவனம் சிதறினாலும் கதை புரியாமல் போய்விடும்.

மனம்கொத்தி பறவை ஆத்மிகா நீண்ட நாட்களுக்கு பிறகு கண்களில் தென்படுகிறார்.

யு ஏ என் பிலிம் ஹவுஸ் ராஜாதாஸ் குரியாஸ் தயாரித்திருக்கிறார்.

ரெஞ்சின் ராஜ் இசை
புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு பலம்.

அறிமுக இயக்குனராக இருந் தாலும் அனுபவம் வாய்ந்தவர் போல் காட்சிகளை அமைத்து கவனத்தை ஈர்க்கிறார் ஜாக் ஹாரிஸ்.

யூகி – யார் யார் எந்த பாத்திரம் என்று ரசிகர்களை கிளைமாக்ஸ் வரை யூகிக்க வைக்கிறது.

Related posts

ஒரு நாள் முன்னதாகவே இந்தியாவில் வெளியாகும் “புல்லட் டிரெயின்”

Jai Chandran

நாயகனாக அறிமுகமாகும் பாடகர் ஹர்ஷவர்தன்..

Jai Chandran

Vijay Antony’s Ratham will haveThree heroines

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend