Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“கோப்ரா”‘ குழுவினருக்கு பெங்களூரில் உற்சாக வரவேற்பு

சீயான் விக்ரம் நடிப்பில் தயாரான ‘கோப்ரா’ படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமை யிலான குழுவினர், பெங்க ளூரூக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட மான பட்ஜெட்டில் தயாராகும் படங்களின் வெளியீட்டிற்கு முன்னர் அப்படக் குழுவினர், ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களின் அன்பை பகிர்ந்து கொள்வதுடன், படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிவித்து, படத்தை திரையரங்கு களில் வருகை தந்து காண செய்வ தற்கான ‘ முதல் நாள் முதல் காட்சி உத்தி’யை மேற்கொண்டு வருகி றார்கள். திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி ஆகிய இடங் களுக்கு பயணித்த ‘கோப்ரா’ பட குழுவினர், இதன் தொடர்ச்சியாக பெங்களூரூக்கும் சென்றனர்.

பெங்களூரூவிலுள்ள நெக்ஸஸ் மால் எனும் வணிக வளாகத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான விழாவில் சீயான் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். கட்டுக்கடங் காத அளவிற்கு திரண்ட ரசிகர் களிடம் சீயான் விக்ரம், ‘கோப்ரா’ படத்தை பற்றி விவரித்து பேசி னார். அதன் பிறகு அவர்கள் எழுப்பிய வினாவிற்கும் பதிலளித் தார். அதைத்தொடர்ந்து பத்திரிக் கையாளர் சந்திப்பும் நடை பெற்றது.

திட்டமிட்டபடி பெங்களூரூவில் ரசிகர்களை சந்தித்த ‘கோப்ரா’ பட குழுவினர், அடுத்த கட்டமாக ஹைதராபாத்திற்கு பயணத்திருக் கிறார்கள்.

இதனிடையே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

துருவ் சர்ஜா, சஞ்சய்தத், ஷில்பா இணையும் “கேடி தி டெவில்”

Jai Chandran

It’s a wrap-up for Dhoni Entertainment’s L.G.M.

Jai Chandran

Pushpa First Single on AUG 13th

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend