Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கடாவர் ( பட விமர்சனம்)

படம்: கடாவர்

நடிப்பு: அமலா பால், ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா

தயாரிப்பு: அமலாபால்

இசை: ரஞ்சின் ராஜ்

கதை: அபிலாஷ் பிள்ளை

ஒளிப்பதிவு : அரவிந்த் சிங்

இயக்கம்: அனூப் பணிக்கர்

பி ஆர் ஒ: ஸ்ரீவெங்கடேஷ்

ரிலீஸ்: டிஸ்னி ஹாட் ஸ்டார் (ஒ டி டி)

நகரில் பிரபல டாக்டர் உள்ளிட்ட இருவர் அடுத் தடுத்து கொல்லப்படு கின்றனர். அந்த கொலைபற்றி போலீஸ் விசாரிக்க தொடங்கு கிறது. வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார். சிறையிலி ருக்கும் வாலிபர் சுவற்றில் வரையும் ஓவியத்தில் உள்ள வர்கள் அடுத்து கொலை யாகின்றனர். கொல்லப் பட்டவர்களின் உடல் களை காவல் துறையில் பணியாற்றும் தடய வியல் நிபுணர் பத்ரா (அமலா பால்) ஆய்வு செய்கிறார். அதில் கொலையாளியின் கைரேகைகள் ஒரே நபருடையது என தெரி கிறது. கொலைகளை செய்யும் மர்ம நபர் யார்? எதற்காக கொலைகள் நடக்கிறது? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

மைனா தொடங்கி பல படங்களில் பல வித கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அமலா பால் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட காவல் துறையில் பணியாற்றும் தடய வியல் நிபுணர் பத்ரா வாக கனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பிணவறையில் நின்று பிரேதபரிசோதனை நடத்தும் காட்சியில் அமலா பாலின் சகிப்புத் தன்மையான நடிப்பும், மெடிக்கல் மாணவர் களுக்கு, நீரில் மூழ்கி பிணமான ஒருவரின் உடலை பற்றிய விளக்கம் அளிப்பது என நிஜ மெடிகல் பேராசிரி யையாகியிருக்கிறார்.

கவர்ச்சி முத்திரையை மறக்கடித்து சிறந்த நடிகையாக புதிய முத்துரை பதித்திருக்கி றார் அமலா பால்.

அமலாபால் கதை நாயகியாக மட்டுமல் லாமல் முதன்முறையாக இப்படம் மூலம் தயாரிப் பாளராகவும் ஆகியிருக் கிறார். முதல் பட தயாரிப்பிலேயே வெற்றி யும் கண்டிருக்கிறார்.

கொலை வழக்கை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக ஹரிஸ் உத்தமன் வில்லத் தனத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு நல்ல போலீஸாக நடித்து கவர்கிறார்.

மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் வினோத்சாகர் நடித்தி ருக்கிறார். இவர்தான் கொலையாளியாக இருப்பரோ என்ற சந்தேக பார்வை கதையை ஜிவ்வென நகர்த்து கிறது.

இளம்ஜோடிகளாக திரிகுன், அதுல்யா ரவி நடித்திருக்கின்றனர். கர்ப்பமாக இருக்கும் அதுல்யா இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழும்போது திடுக்கிட வைக்கிறார்.

ரித்விகா நர்ஸாக வந்து ஆசிட் வீச்சில் கருகும் போது மனதை கனமாக்கிறார்.

நடிகர், நடிகையர்களின் நடிப்பு மட்டுமல்லாமல் அவர்களை அந்தந்த பாத்திரங்களாக மாற்றி யிருப்பது நம்பும்படிடான கதை அம்சமும் அதை எதர்த்தமாக இயக்கிய இயக்குனரின் சாமர்த்தி யமும் முக்கிய காரணம்.

தன் சகோதரர் மரணம் அடைந்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டதை நேரில் கண்ட நிஜ அனுபவத்தை இப்படத்தின் கதைக் கருவாக அபிலாஷ் பிள்ளை எழுதியிருப்பது காட்சிகளை பலமாக்க துணை நிற்கிறது.

இயக்குபர் அனூப் பனிக்கர் திரில்லர் படம் இயக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதற்க்காக கமர்ஷியல் அம்சங்களை கட்டிக்கொண்டு உருலாமல் நம்பும்படி யான இயற்கையான நகர்வுகளுடன் இயக்கியிருப்பது படத்தை தூக்கி நிறுத்துகிறது.

படம் பார்ப்பவர்கள் நிச்சயம் ஒரு பாராட்டு மாலையை சூடட தவறமாட்டாரகள்.

ரஞ்சன் ராஜின் பின்னணி இசை இன்னொரு தூண்.

அரவிந்த் சிங் ஒளிப்பதிவு கவனத்தை சிதறவிடாமால் காட்சிகளுக்குள் கண் களை நிலைகுத்த வைக்கிறது.

கடாவர் என்றால் என்ன என்று பலரும் கேட்கும் கேள்வி அதற்கு கிளை மாக்ஸில் விளக்கம் தரும்போது அர்த்தம் விளங்குகிறது.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இப்படத்தை காணலாம்

கடாவர் – வார்த்தையில் மட்டுமல்லாமல் படத்திலும் வித்தியாசம் காட்டியதற்காக ஒரு சபாஷ் போடலாம்.

 

Related posts

மறைந்த விவேக் நினைவாக ஆத்மிகா வீட்டில் நட்ட மரம்

Jai Chandran

எதற்கும் துணிந்தவன் ( பட விமர்சனம்)

Jai Chandran

Naga Chaitanya, Chandoo Mondeti, Bunny Vas Meet Fishermen Families

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend