Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லால் சிங் சத்தா (பட விமர்சனம்)

படம்: லால் சிங் சத்தா

நடிப்பு: அமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங், அஹமத் உமர், மானவ் விஜ்,

தயாரிப்பு: அமீர்கான் புரடக்‌ஷன், வயாகாம் 18 ஸ்டுடியோஸ்

இசை: பிரிதம்

பின்னணி இசை: தனுஜ் டிக்கு

ஒளிப்பதிவு : சத்யஜித் பாண்டே

இயக்கம்: அத்வைத் சந்தன்

பி ஆர் ஒ: ஸ்ரீவெங்கடேஷ்

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின்

லால் சிங் சத்தா (அமீர் கான்) பிறவியிலேயே நடப்பதில் தடுமாற்றமும், புரிந்துகொள்வதில் மந்தமானவராகவும் உள்ளவர். காலில் சப்போர்ட்டுக்கு செயற்கை கருவி பொருத்திக் கொண்டு நடக்கிறார். பள்ளியில் சேரும் அவரை சக மாணவர்கள் பழிக்கின் றனர். ஆனால் மாணவி ரூபா (கரீனா) லாலுக்கு ஆதரவாகவும் நட்பாகவும் இருக்கிறார். கல்லூரி யிலும் இவர்கள் நட்பு தொடர் கிறது. ரூபாவை மணக்க விருப்பம் தெரிவிக்கிறார் லால். அவரோ தான் பெரிய பணக்காரியாக வேண்டும், சினிமாவில் நடித்து நடிகையாக வேண்டும் என்ற ஆசையை சொல்லி விட்டு பிரிந்து செல்கி றார். லால், ராணுவத்தில் சேர்கிறார். அதில் திறமையை வெளிப் படுத்தி உயர் விருது பெறுகிறார். ஆனாலும் ரூபாவின் ஞாபகம் லாலை வாட்டுகிறது. இதற்கிடையில் தாயின் பேச்சை தட்டாத லால் ராணுவத்திலிருந்து விலகி வந்து ஜட்டி, பனியன் கம்பெனி ஆரம்பித்து பெரிய தொழில் அதிபராகிறார். மீண்டும் ரூபாவை லால் சந்தித்தாரா? அவரை மணந்தாரா ? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

அமீர்கான் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஒரு படம் நடித்தாலும் அர்த்தமுள்ள அற்புத மான படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார். அந்த பட்டியலில் லால் சிங் சத்தாவும் இடம் பிடிக்கிறது.

ஒரு கதாபாத்திரத்தை ஏற்றால் அந்த பாத்திரமாக மாறும் ஒரு சில நடிகர்களில் அமீர்கான் ஒருவர். எதையும் சொன்னவுடன் நம்பும் லால் என்ற வெள்ளந்தியாக மாறியிருக்கும் அமீர்கானின் ஒவ்வொரு அசைவும் ஆயிரம் நடிப்பை பிரதிபலிக்கிறது.

நகரில் ஆர்ப்பாட்டம், மதக் கலவரம் நடக்கும்போது அதை அமீர்கானிடம் மாற்றி சொல்லும் தாய் மோனா சிங், ” ஊரில் மலேரியா பரவுகிறது. நீ பத்திரமாக வீட்டிலேயே இரு” என்று சொல்ல அவரும் அதைக் கேட்டு வீட்டிலேயே வாரக்கணக்கில் முடங்கும் காட்சிகள் ரசனை.

ராணுவத்தில் அமீர்கானின் நண்பராக சேர்கிறார் நாக சைதன்யா. ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பனியன், ஜட்டி கம்பெனி ஆரம்பிப்பதாக கூறுவதும் அதில் அமீர்கானை பார்ட்னராக சேர்ப்பதாக கூறுவதும் காமெடியாக இருந்தாலும் படத்தின் பிற்பகுதியில் அதையே இயக்குனர் கதையாக மாற்றி காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்.

ஆரம்பகட்டத்தில் நடக்கவே சிரமப்படும் அமீர்கான் பின்னர்  “ஓடு” என்று கரீனா சொல்லும் ஒற்றை வார்த்தையை கேட்டு புயல் வேகத்தில் ஓடுவதும் , ஓட்டப்பந்தய வீரர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலாவதாக நிற்காமல் ஒடுவதும் அரங்கை சிரிப்பலையால் குலுங்க வைக்கிறது.

ரூபா கதாபாத்திரத்தில் நடித்து கவர்கிறார் கரீனா கபூர். அமீர் கானின் உண்மையான அன்பை புரிந்துக் கொண்டு அவரை தேடி வருவதும் , பெரிய நடிகையாக வேண்டும் என்ற கனவில் வாழ்வை தொலைப்பதுமாக உருக வைக்கிறார்.

பாலா என்ற கதாபாத்திரத்தில் நாக சைதன்யா மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். அமீர்கனைப் போல அவரும் ஒரு வெள்ளந்தி மனதுடன் வந்து எதர்த்தமான நடிப்பை வெளியிட்டிருக்கிறார்.

1994ல் வெளியான அமெரிக்கன் பிலிம் “ஃபாரஸ்ட் கம்ப் என்ற படத்தை தழுவி லால் சிங் சத்தா உருவாகியிருக்கிறது.

எரிக் ரோத், அதுல் குல்கர்னி 10 ஆண்டு காலமாக இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக் கின்றனர். எமர்ஜன்சி காலம் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, கார்கில் போர் வரை பல வரலாற்று சம்பவங்களை கதையில் உள்ளடக்கியிருப்பது சிறப்பு.

மத கலவரத்தை மலேரியாவோடு ஒப்பிட்டு சொல்லப்படும் வசனங்கள் மதவாதிகளுக்கு கன்னத்தில் அறையும் பளார் விளாசல்கள்.

இமயம் முதல் குமரிவரை இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருப்பது தேசத்தை இணைத்து காட்டும் செயல். இதற்காக மெனக்கெட்டிருக்கும் ஒளிப்பதிவாளர் சத்யஜித் பாண்டே, இயக்குநர் அத்வைத் சந்தன் உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதேபோல் பிரிதம் இசை, டிக்குவின் பின்னணி இசை காட்சிகளை சிதைக் காமல் காதில் இதமாக ஒலிக்கிறது.

சுமார் இரண்டே முக்கால் மணி நேர படமாக நீண்டாலும் கொஞ்சமும் சோர்வு தட்டாமல் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போட்டு விடுகிறது லால் சிங் சத்தா.

லால் சிங் சத்தா –
இதயங்களை வெல்லும்

 

Related posts

முதல்வராகும் மு.க.ஸ்டலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Jai Chandran

Allu Arjun gifts gold coins and Rs 10 lakh to PUSHPA team

Jai Chandran

டங்கி: ராஜ்குமார் ஹிரானி புது சாதனை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend