Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

எமோஜி (பட விமர்சனம்)

படம்: எமோஜி

நடிப்பு: மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சவுத்ரி, வி.ஜே.ஆஷிக், ஆடுகளம் நரேன், பிரியதர்ஷினி

தயாரிப்பு: ஏ.எம்.சம்பத்குமார்

இசை: சனத் பரத்வாஜ்

ஒளிப்பதிவு : ஜலந்தர் வாசன்

இயக்கம்: சென் எஸ்.ரங்கசாமி

பி ஆர் ஓ: யுவராஜ்

ரிலீஸ்: ஆஹா ஒரிஜினல் ஒ டி டி

ஐடியில் வேலை பார்க்கும் மஹத் கிரிக்கெட் பேட் வாங்க ஷாப்பிங் செல்கிறார். அங்கு வேலை செய்யும் மானஸாவை கண்டு மயங்குகிறார். தொடர்ந்து அவரை ஃபாலோ செய்து காதலை சொல் கிறார். கண்டிஷனுடன் மஹத்தை காதலிக்க ஒப்புக்கொள்கிறார் மானஸா. அதேபோல்
மற்றொரு ஜோடியான தேவிகா, ஆஷிக் காதலிக்கின்றனர். இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்கின்றனர். திடீரென்று மனஸாவுக்கு வேறுமாப்பிள்ளையுடன் திருமணம் நடக்கிறது. அதேபோல் மஹத்துக்கும் தேவிகாவுக்கும் திருமணம் நடக்கிறது. காதல் ஜோடிகள் பிரிந்தது ஏன்? ஜோடி மாறி திருமணம் நடந்தது எப்படி என்பதை இந்தக் கால இளசுகளின் வாழ்க்கையை மையப் படுத்தி பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கோர்ட்டில் மஹத், தேவிகா விவாகரத்துடன் கதை தொடங்கு கிறது. ஆனால் மஹத் மானசா ஜோடியின் காதல் பிளாஷ்பேக்கில் விரிகிறது.
ஷாப்ping செய்ய சென்ற இடத்தில்  மானாஸாவை பார்க்கும் மஹத் மட்டுமல்ல மற்ற இளசுகளும் அவரது வாழைத்தண்டு கால் அழகில் சொக்கிவிடுகின்றனர்.

பெரும்பாலும் குட்டையான ஷார்ட் ஸுடன் வரும் மானஸா ஒவ்வொரு முறையும் இளவட்டங்களை கவர்ச்சி விருந்தில் கிரங்கடிக் கிறார்.

மனஸாவை காதலிக்கும் மஹத் தேவிகாடம விவாகரத்து கேட்டு கோர்ட்டில் நிற்பது ஏன் என்ற கேள்வி படத்தின் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்கத் தான் புரிகிறது.

மானஸா மஹத் அறைக்கு வரும்போது சிக் உடையில் கையில் பாட்டிலுடன் நுழந்தவுடன் இன்றைக்கு ஏதோ கட்டில் விருந்து இருக்கப்போகிறது என்பதை கணிக்க முடிகிறது. அந்த எதிர்ப்பார்ப்பை இயக்குனர் நிறைவேற்றியும் வைப்பது ஜிவ்.

காதலி மானஸாவை தேடி மஹத் அவரது வீட்டுக்கு செல்லும்போது பெண்கேட்கத்தான் செல்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது ஆனால் அங்கு மானாஸா வேறு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட சம்மதிப்பது ஏன் என்ற குழப்பம் மனதை நெருடிக் கொண்டே இருக்கிறது. அதற்கான காரணத்தை பின்னர் சொல்வது என்ன கண்டிஷன் காதலோ என்று இந்தக்கால காதலை நொந்துக் கொள்ள வேண்டி உள்ளது.

மஹத் ரொம்ப மச்சக்காரர் என்று அரங்கில் கிசு கிசு கேட்கிறது.

தேவிகா கொழுக் மொழுக் கென்று கிளுகிளுக்க வைக்கிறார். ஜிம்னாஸ்டிக் வித்தை தெரிந்தவர் என்பதால் ஒற்றை காலை தூக்கி ஹீரோவின் தோளில் வைக்கும் போது யம்மாடியோவ் போட வைக்கிறார்.

மேட்டர் முடிஞ்சதா, காண்டம் வாங்குவது என ஹீரோயின்கள் அடிக்கும் லூட்டி ஒ டி டிக்கே உரிய ஸ்டைலாக மாறிவிட்டது.
படத்தில் மற்ற துணை பாத்திரங் களுக்கு அதிக வேலை இல்லை.

ஏ. எம்.சம்பத்குமார் தயாரித்திருக்கிறார்.

சனத் பரத்வாஜ் இசை
ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு இனிமை, தெளிவு.

சென் எஸ்.ரங்கசாமி தற்போதைய கார்ப்ரேட் காதலை கண்முன் நிறுத்துகிறார்.

Related posts

செக்யூரிட்டி (குறும் பட விமர்சனம்

Jai Chandran

ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கிறார்

Jai Chandran

விக்ரம் பிரபு நடிக்கும் டைகர் படப்பிடிப்பு தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend