Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் டி..பி.கஜேந்திரனிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர்

பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டுக்கு நேரில் சென்று நலம விசாரித்தார். அதுகுறித்து நன்றி தெரிவித்துள்ள டி.வி.கஜேந்திரன் கவிதை வெள்யிட்டுள்ளார். அதில் கூறியதாவது:

முத்துவேலர் பேரனே
முத்தமிழ் அறிஞரின் மைந்தனே
கழகத்தின் தளபதியே
தமிழகத்தின் முதல்வனே

உன் நல்லாட்சியில் வாழும்
நான் ஒரு சிறு குடிமகன்
தூரத்திலிருந்து உன் முகம் பார்த்து
துன்பத்தை துரத்தும் சிறியவன்

கல்லூரி காலத்தில்
புத்தகம் பார்த்து படித்ததை விட
உன் முகம் பார்த்து படித்தது ஏராளம்
படங்களை நான் இயக்கினாலும்
என்னை இயக்கியது நீங்களல்லவா?

குசேலனை தேடி வந்த
கிருஷ்ணன் போல
என் வீடு தேடி வந்தாய்
நான் வீடுபேறு அடைந்தேன்

நலம் விசாரித்து, நற்பரிசு தந்து
நானிலம் போற்ற நின்றாய்
நீங்கள் என் நண்பன் என்பதே
நான் பெற்ற செல்வம்

நட்புக்கு இலக்கணம் வகுத்தவனே
வாழும் நாளெல்லாம்
உனை நினைப்பேன்
உனை மறக்க நேரிடின் மரிப்பேன்

அன்புடன்
டி.பி.கஜேந்திரன்.

முதல்வருடன் வந்து
முழு அன்பைத் தந்த
பொய்யாமொழியின் புதல்வருக்கும்,
கழகத்தின் செயல்வீரர் பூச்சி முருகனுக்கும்
நன்றிகள் கோடி.

Related posts

ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில்

Jai Chandran

ஜமா (பட விமர்சனம்)

Jai Chandran

இந்தியாவில் முதல் முறையாக ஏலத்தில் வெளியாகும் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend