Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி லாரன்சிடம் ரசிகர்கள் முறையீடு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நிலை கருதி அரசிய லுக்கு வரவில்லை என்று கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். ஆனால் அவரது ரசிகர்கள் அதை ஏற்க மறுத்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஜனவர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரஜினி வெளியிட்ட அறிக்கை யில்,’ என்னுடைய முடிவை நான் அறிவித்துவிட்டேன். என்னை அரசியலுக்கு வரச் சொல்லி வற்புறுத்தாதீர்கள்’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகர் நடிகர் ராகவா லாரன் ஸிடம் ரஜினி ரசிகர்கள் சென்று தலைவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு அரசிய லுக்கு வர அழைப்பு விடுக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.


இதுகுறித்து ராகவா லாரன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள் ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:
பலர் என்னிடம் வந்து வள்ளு வர் கோட்டம் அருகே நடக் கும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். சாய் ரமணி மூலமாக சில குரல் பதிவு களும் எனக்கு வந்தது. தலைவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் கேட்கச் சொல்லி பலர் என்னிடம் கூறுகிறார்கள். அதனால்தான் இந்த அறிக் கையை விடுக்கிறேன். தலை வர் வேறு எந்தகாரணம் சொல்லி இருந்தாலும் நாம் அவரிடம் கோரலாம் ஆனால் அவர் உடல்நிலையை முக்கிய காரணமாக கூறுகிறார். நாம் அவரிடம் கோரிக்கை வைத்து தன் முடிவை மாற்றிக் கொண்டு அதனால் அவருக்கு ஏதாவது நடந்தால் நாம் குற்ற வுணர்வுடன் வாழ்நாள் முழு வதும் வாழ வேண்டி இருக் கும். அவர் அரசியலுக்கு வரா விட்டாலும் என்றைக்கும் எனக்கு அவர்தான் குரு. அவருடன் நெருக்கமாக பேசு வதால் அவர் உடைநிலை பற்றி எனக்கு தெரியும், இப்போதைய தேவையெல் லாம் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் அமைதி யாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டி யதுதான். என்னுடைய பிரார்த்தனையில் அவர் எப்போதும் இருக்கிறார். குருவே சரணம்.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.

Related posts

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

Jai Chandran

தண்டட்டி (பட விமர்சனம்)

Jai Chandran

Making of RRR Movie on July 15th

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend