மத்தியப் பிரதேசத்தில் 6 அமைச்சர்கள் உள்பட 22 காங்கிரஸ் எம் எல் க்கள் திடீர் ராஜினாமா செய்ததால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை உருவாக்கி உள்ளது.
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மத்திய பிரதேசத்தில் நடந்து வருகிறthu. கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா இடையே அதிகார மோதல் வெடித்தது. இதைய டுத்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா விலகினார்.
.
இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் 6 அமைச்சர்கள் உள்பட 22 எம்.எல்.ஏக்கள் இன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது. இதை யடுத்து சோனியா காந்தியுடன் கட்சி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ஆலோசனை நடத்தினார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி ஜோதிராதித்யா கட்சியில் இருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டது
இதற்கிடையில் ஜோதிராதித்யா பாஜகவில் இணைந்துடன் அக்கட்சியின் தேசிய செயலர் ஜே.பி.நட்டாவை சந்தித் தார். இதுபோன்ற நிகழ்வுகளி னால் மத்தியப் பிரதேச அரசியல் சூழ்நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கமல்நாத் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
#Madhya Pradesh government crisis : Scindia quits Congress, 22 MLAs resign