Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

80ஸ் பில்டப் (பட விமர்சனம்)

படம்: 80ஸ் பில்டப்

நடிப்பு: சந்தானம், ராதிகா பிரீத்தி, நரேன், ஆனந்தராஜ், கே.எஸ்.ரவி குமார்,  ஆர்.சுந்தர்ராஜன், ரெடின்  கிங்ஸ்லி, மனோபாலா, மயில்சாமி, சுவாமி நாதன், மன்சூர் அலிகான்,

தயாரிப்பு; ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல்ராஜா

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: ஜேக்கப் ரத்தினராஜ்

இயக்கம்: எஸ்.கல்யாண்

பி ஆர் ஒ: சதீஷ்

கமல்ஹாசன், ரஜினியின் உச்ச காலகட்டமான 80கால கட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது 80ஸ் பில்டப். சந்தானம் கமலின்  தீவிர ரசிகர். அவரது தாத்தா ஆர்.சுந்தர்ராஜன் ரஜினி ரசிகர். ஜமீன் பரம்பரை யான  இவரது அரண்மனை வீட்டில் உள்ள பழங்கால கத்தியை எடுக்க மன்சூர் அலிகான் கோஷ்டி வருகிறது  கத்தியை தர வேண்டு மென்றால் மதிப்புள்ள பொருளை  தருமாறு சுந்தர்ராஜன் கேட்க அவரிடம் வைரத்தை தருகின்றனர். அவரோ அதை  கற்கண்டு என்று விழுங்கி விடுகிறார்.  அதே சமயம் மின்விசிறியில் ஷாக் அடித்து இறந்து விடுகிறார். அவரது வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க ஆனந்தராஜை பெண் வேடம் போட்டு அழைத்து வருகின்றனர். அதே.சமயம் தன் வீட்டுக்கு வரும் ராதிகா பரீத்தியை தன்னை காதலிக்க வைப்பதாக தன் தங்கையிடம் சவால் விடுகிறார்  சந்தானம். இது காதல்  காமெடி கலாட்டாவாக இறுதிவரை  உருவெடுக்கிறது.

மீண்டும் காமெடி ஹீரோவாக  டி டி ரிட்டர்ன்ஸ் படத்தில் திரும்பிய சந்தானம் அந்த பாணியை 80ஸ் பில்டப் படத்திலும் தொடர்ந்திருக் கிறார்.

பழங்கால கத்தியை திருட வரும் மன்சூர் கோஷ்டி ஆர்.சுந்தராஜ னிடம் வைரத்தை கொடுக்க அதை விழுங்கிவிட்டு ஆர்.சுந்தர் ராஜன்  ஷாக் அடித்து இறந்ததிலிருந்து காமெடி ரேஸ் தொடங்கி விடுகிறது.

வீட்டுக்கு வரும் ராதிகா பிரீத்தி அழகில் மயங்கும் சந்தானம் அவரை தன் காதல்  வலையில் வீழ்த்துவதாக தனது தங்கையிடம் சவால் விட்டு ராதிகாவை கவர சந்தானம் செய்யும் பில்டப்களும் அவரை ராதிகா காதலித்து விடாதபடி செய்ய குறுக்கே தங்கை  போடும் முட்டுக்கட்டைகளும் ஒருபக்கம் ஜரூராக கலகலப்பை இறைத்துக் கொண்டிருக்க மறுபக்கத்தில் ஆனந்ராஜுக்கு பெண் வேடம் போட்டு வந்து மன்சூர் கோஷ்டி அடிக்கும் லூட்டி வயிற்றை பதம் பார்க்கிறது.

சேலை கட்டி கட்டு மஸ்த்தாக வரும் ஆனந்தராஜை ஆடுகளம் நரேன் கொஞ்சியபடி அவரது மடியில் படுத்து உருள்வதும், இடுப்பை கிள்ளுவதுமாக. ஏகத்துக்கு குசும்பு செய்து அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்துகிறார் .

பெங்களூர் அண்ணனை அழைத்து வருகிறேன் என்று ரயில் நிலையத்துக்கு குதிரை வண்டியில் செல்லும்.மயில்சாமி அவருடன் வரும் 2ம் தாரத்தை பார்த்து ஜொள்ளு விடுவதும் ஊரை சுற்றி செல்கிறேன் என்று சொல்லி மீண்டும் பெங்களுருக்கே வண்டியை ஓட்டி செல்வதும் இடைவிடாத காமெடி கலாட்டா.

எமதர்மனாக நார்மல் சட்டை பேன்ட் போட்டு வரும் கே.எஸ்.ரவி குமார், முனிஸ்காந்த் , ரெடின் ஆர்.சுந்தராஜன் ஆவியுடன் செய்யும்.அமர்க்களம் , காமெடி பஞ்ச்கள் பட பட சரவெடி.

எல்லாமே ஆக்ஷன் காமெடி செய்வதால் அதை திரையில் பார்த்தால்தான் முழுமையாக ரசிக்க.முடியும்..

காமெடி படம்தான் என்று லேசாக இருந்துவிடாமல் நல்ல இசை தரவேண்டும் என்ற ஜிப்ரானின் முயற்சி பாடல்களின் தரத்தில் வெளிப்படுகிறது.

ஒரே வீட்டுக்குள் முழு படப்பிடிப் பையும் நடத்தி முடித்திருக்கிறார் இயக்குனர் எஸ்.கல்யாண். லொகேஷன் . செலவை குறைத்து ஆர்டிஸ்ட் எண்ணிக்கையை அதிகரித்து ஒவ்வொரு காட்சியை யும் நட்சத்திரங்கள் நிரம்பிய சீன்களாக  காட்டி தன் பங்குக்கு பில்டப் காட்டியிருக்கிறார் இயக்குனர். .  படத்தின் நீளம் கொஞ்சம் டயர்ட் ஆக்குவதுடன் உடம்பை நெளிய வைக்கிறது.

இயக்குனரின் வேகத்துக்கு ஒளிப்பதிவாளரும்  ஈடு கொடுத் திருக்கிறார்.

80ஸ் பில்டம் – கவலை மறந்து சிரித்துவிட்டு வரலாம்.

 

 

Related posts

சுசீந்திரன் இயக்க ஜெய் நடிக்கும் படத்துக்கு பெயர் மாற்றம்

Jai Chandran

Author Jeyamohan Short Story Based OTT Movie

Jai Chandran

சிவராஜ்குமாரின் 131வது படம், ரசிகர்கள் உற்சாகம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend