Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவராஜ்குமாரின் 131வது படம், ரசிகர்கள் உற்சாகம்

கர்நாடக திரையுலகின் வசூல் சக்கரவர்த்தி சிவராஜ்குமார்  ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின் 131வது படம் இனிதே துவங்க வுள்ளது. சமீபத்தில், சிவண்ணா வின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு குழு. தற்போது படத்தைத் தயாரிக்கத் தயாராகி விட்டது. சிவண்ணாவின் 131வது படத்தின் பூஜை (மங்கல ஆரம்பம்) விரைவில் நடக்கவுள்ளது.

ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமாரின் 131வது படத்திற்கான படப் பிடிப்பை பிரமாண்டமாக துவங்கிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று ஒட்டு மொத்த படக்குழுவும் இன்று சிவண்ணாவைச் சந்தித்தது.

இயக்குநர் கார்த்திக் அத்வைத், தயாரிப்பாளர்கள் N.S. ரெட்டி மற்றும் சுதீர், ஒளிப்பதிவாளர் A.J.ஷெட்டி, மற்றும் எடிட்டர் தீபு S.குமார் ஆகியோர் ஹாட்ரிக் ஸ்டார் சிவண்ணாவை அவரது நாகவாரா இல்லத்தில் சந்தித்த னர். இந்த சந்திப்பு புகைப்படங் களை ரசிகர்கள் இணையத்தில் உற்சாகமாக பகிர்ந்து வருகின் றனர்.


இயக்குநர் கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் சாண்டல்வுட்டில் அறிமுகமாகிறார், இது அவருக்கு இயக்குநராக இரண்டாவது படமாகும். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக தயாராகும் இப்படத்தில், சிவண்ணா வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். மோஸ்ட் புகழ், V.M.பிரசன்னாவும், ‘சீதாராமம்’ புகழ் ஜெயகிருஷ்ணாவும் இப்படத் திற்கு எழுத்தாளர்களாகப் பணி யாற்றி வருகின்றனர். ‘விக்ரம் வேதா’, ‘ஆர்டிஎக்ஸ்’, ‘கைதி’ புகழ் சாம் C.S. இசையமைக்க, A.J. ஷெட்டி ஒளிப்பதிவு செய்யவுள் ளார். படத்தொகுப்பை தீபு S. குமார் செய்ய, கலை இயக்கத்தினை ரவி சந்தேஹக்லு செய்கிறார். இப்படத்தை புவனேஷ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் S.N. ரெட்டி மற்றும் சுதீர் P. தயாரிகின்றனர். ரமணா ரெட்டி நிர்வாக தயாரிப்பா ளராக பணியாற்றுகிறார்.

Related posts

Aranmanai3 5th single THEEYAGA

Jai Chandran

போப் 16ம் பெனடிக் மறைவுக்கு சரத்குமார் இரங்கல்

Jai Chandran

A week away to witness KadaisiVivasayi

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend