படம்: ஜி டி என்
நடிப்பு: மாதவன, சத்யராஜ், பிரியாமணி, ஷீலா ராஜ்குமார், துஷாரா விஜயன், அதிதி பாலன், ஜெயராம், வினை ராய், கருணாகரன் மோகன்ராம், தம்பி ராமையா, பிரகடா சாகர், சில்பா ஸ்ரீகுமார்
தயாரிப்பு:ஆர்.மாதவன் சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன்
இசை: கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு: அரவிந்த் கமல் நாதன்
இயக்கம்: கிருஷ்ணகுமார் ராம்குமார்
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா (D’One), நாசர்
கதை: கோவை விஞ்ஞானி என்று அழைக்கப்படும் ஜி டி நாயுடு வாழ்க்கை கதை ஜி டி என் படமாக உருவாகி இருக்கிறது.
1940 க்கு முந்தைய காலகட்டங்களில் பிறந்த ஜி டி நாயுடு இளம் பருவத்தில் புத்தகப் படிப்பு அதிகம் இல்லாவிட்டாலும் அனுபவப் படிப்பு அதிகம் பெற்றவர். ஒரு மோட்டார் சைக்கிளை பிரித்து எப்படி மீண்டும் ஒன்று சேர்ப்பது என்பதை தன்னுடைய இளம் வயதிலேயே கற்றுக் கொள்கிறார். அந்த ஆர்வம் வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது பல்வேறு கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துகிறார். அவரது கண்டுபிடிப்புகள் பிரிட்டிஷ் அரசுக்கு பிடிக்காத நிலையில் பல்வேறு தொல்லைகளை தருகின்றனர். அவர்கள் தரும் தொல்லைகளிலிருந்து எப்படி ஜிடி நாயுடு மீள்கிறார். தனது கண்டுபிடிப்புகளில் என்னென்ன முக்கியமான பொருட்களை கண்டுபிடித்தார் போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி படித்த காலத்தில் இளைஞர்கள் கோவை விஞ்ஞானி ஜி.டி நாயுடு பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு கண்டுபிடிப்புகளை அவர் சொந்தமாக கண்டுபிடித்தது பலருக்கும் வியப்பு.
தந்தை பெரியார், காமராஜ், டோனி டெண்டுல்கர் என பல்வேறு தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகியிருக்கிறது. ஆனால் வெளிநாட்டு விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய கோவை விஞ்ஞானி ஜிடி நாயுடு வாழ்க்கை இதுவரை சினிமா படமாகாமல் இருந்தது ஆச்சரியம் தான்.
ஜிடி நாயுடு என்று பலரும் அறிந்திருந்தாலும் அவரது முழு பெயர் கோபால்சாமி துரைசாமி நாயுடு என்பதாகும்.
ஜிடி நாயுடு கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருக்கிறார். ராமையா பிள்ளை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
1941 காலகட்டத்தில் கோவை கலங்கள் பகுதியில் கதை தொடங்குகிறது. மனைவிக்கு வெங்காயம் அரிந்தால் கண் எரியுமே என்பதற்காக அந்த காலகட்டத்திலேயே மரக்கட்டையில் வெங்காயம் வெட்டும் சாப்பர் கருவியை செய்து கொடுத்திருப்பது ருசிகரமான தகவல்
வெளைக்காரர் ஒருவர் ஓட்டும் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்கி அக்குவேறு ஆணிவேராக கழற்றி அந்த மோட்டார் சைக்கிள் எப்படி ஓடுகிறது என்பதை அறிய ஜிடிஎன் செய்யும் ஆராய்ச்சி இளைஞர்களுக்கு உந்து சக்தி தரும்.
முகச்சுவரம் செய்யும்போது கன்னத்தில் ஒருவர் பிளேடாள் வெட்டிக் கொள்வதை பார்க்கும் மாதவன், மிஷின் ரேசரை கண்டுபிடிப்பதும் அந்த மிஷினை வைத்து ஹிட்லர் ஷேவ் செய்து கொள்வதை காட்டுவதும் ரசிகர்களின் ஞாபகத்தை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

ஜிடி நாயுடு ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல போராளி. வெள்ளைக்காரர்களை எதிர்த்து அவர் நறுக்குத்தெறிக்க வசனம் பேசுவதும், தான் சம்பாதித்த சொத்துக்களை கலெக்டர் பறிமுதல் செய்து அவ்வளவு சொத்தையும் ஒரு ரூபாய்க்கு ஏலம் விடும்போது ஜிடி நாயுடு மாதவனுடன் வரும் ராமையா பிள்ளை சத்யராஜ் செய்யும் செயல் அசத்தல்.
ப்ரியாமணி, துஷாரா விஜயன், அதிதி பாலன், ஷீலா ராஜ்குமார் என நான்கு கதாநாயகிகள் வேடங்களை பதட்டமில்லாமல் நிறைவு செய்திருக்கின்றனர்.
சத்யராஜ் ஏற்றிருக்கும் ராமையா பிள்ளை வேடம், ஜெயராம் ஏற்றிருக்கும் கலெக்டர் வேடம் எல்லாமே பொருத்தம்.
ஜிடி நாயுடு பயன்படுத்திய அந்த கால மோட்டார் வாகனங்களே படத்தில் பயன்படுத்தியிருப்பது ஒரு பிளஸ். படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியர் என்ற அளவுக்கு ஜிடி நாயுடு கதாபாத்திரத்தை காட்டுகின்றனர் அதேசமயம் அந்த தொழில்நுட்பத்தை இன்னும் கூட நுணுக்கமாக படத்தில் காட்டி இருந்தால் கூடுதல் கவனம் ஈர்த்திருக்கும்.
2022 ஆம் ஆண்டு ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையில் ராக்கெட்டரி நம்பி எபெக்ட் என்ற பெயரில் ஆர் மாதவன் நடித்தார் தற்போது ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்திருப்பது அவரது கதை தேர்வு நேர்த்தியை காட்டுகிறது.
ஆர்.மாதவன் சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் படத்தை தயாரித்திருக்கின்றனர்.
கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார்.
அந்த காலகட்டத்து காட்சிகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமல் நாதன்.
இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் ஜிடி நாயுடு வாழ்க்கையை காட்டியிருந்தாலும் அவர் தொழில் நுட்பத்தில் வேறு என்னவெல்லாம் கண்டுபிடிப்புகளை காட்டினார் என்பதை செய்முறையாக காட்டி இருக்கலாம். ஆனால் அது தெரிந்த விஷயம் என்பதால் அவரது வாழ்க்கையில் நடந்த போராட்ட சம்பவங்களை மையப்படுத்தி சினிமா பாணியில் படத்தை இயக்கியிருக்கிறார்.
ஜி டி என் – இளைஞர்கள் முதியவர்களை கவரும்

Review by
Jayachandhiran K.
Trending cinemas now.com
