தமிழ் திரையுலகின் 2021ம் ஆண்டின் முதல் விழாவாக இன்று காலை ’மாயத்திரை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் அசோக் கதாநாயகனாக நடிக்க ஷீலா ராஜ்குமார், சாந்தினி ஹீரொயின்களாக நடிக்கின்றனர். வி.சாய்பாபு த்யாரிக்கிறார். டி.சம்பத்குமார் இயக்குகிறார், இளையராஜா வேலு சாமி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.என்.அருணகிரி இசை அமைக்கிறார். எஸ்.தமன் ஒரு பாடலுக்குமிசை அமைத்துள்ளார்.
மாயத்திரை ஆடியோ விழாவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை தலைவர் கதிரேசன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். நடிகை குஷ்பு ஆடியோவை வெளியிட நடிகை சுஹாசினி பெற்றுக் கொண்டார்.
பிறகு குஷ்பு பேசியதாவது:
திரையுலகுக்கு நான் வந்து 33 வருடங்கள் ஆகிவிட்டது. எங்களை இயக்குனர்கள் படங்களில் அறிமுகப்படுத் தும்போது கொண்டாட்டமாக அறிமுகப்படுத்துவார்கள். எங்களுடன் நடித்த நடிகர்கள், பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் அவ்வளவு கண்ணியமானவர் களாக இருந்தனர். நடிகை களுக்கு கண்ணியம் குறையா மல் பாதுகாப்பு அரணாக திகழ்ந்தார்கள். அப்படிப்பட்ட வர்களில் ஒருவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர் சாய்பாபு. எனது முதல் படத் திலிருந்து இவர்தான் எனக்கு காஸ்டியூம் டிசைனர். எனது திருமண சேலையும் இவர் தான் வடிவமைத்தார். இவர் காஸ்டியூம் டிசைனராக இருந்து இன்றைக்கு தயாரிப் பாளராகி இருக்கிறார். இப்படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்து அவர் தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும். சினிமாவில் உள்ள எங்களை போன்றவர்களுக்கு அதில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயேதான் முதலீடு செய்யத் தெரியும். வேறு தொழில் செய்யத் தெரியாது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக முரளி ராமசாமி தேர்வாகி இருக்கிறார். சிறிய படங்கள், மீடியம் பட்ஜெட் படங்கள் பெரிய படங்கள் என மூன்று பிரிவிகளில் படங்கள் தயாராகிறது. சிறிய படங் களுக்கு சங்க தலைவர் என்ற முறையில் பல உதவிகளை செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இன்னொரு கோரிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வைத்துக் கொள்கிறேன். திரையுலகிற்கு 100 சதவீத டிக்கெட் அனுமதிக்க அரசு அனுமதி தர வேண்டும். டாஸ்மாக் கடை களுக்கு 100 சதவீதம் அனுமதி இருக்கிறது. சினிமாவுக்கும் 100 சதவீதம் அனுமதி தர வேண்டும்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
மாயத்திரை ஹீரோ அசோக்கிற்க்கு சிறந்த கலை மற்றும் சமூக பணியாற்றியதற்காக சிங்கப்பூர் அமைப்பு அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. அதனை நடிகைகள் குஷ்பு, சுஹாசினி அவருக்கு வழங்கி வாழ்த்தினார்கள்.
விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.முரளி ராமசாமி, செயலாளர் ராதா கிருஷ்ணன், துணை தலைவர் கதிரேசன் ஆகியோர் பேசும் போது.’இந்த புத்தாண்டு முதல் தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டாக அமைய வேண்டும். சிறுபட தயாரிப்பா ளர்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அவ்வள வையும் எங்கள் நிர்வாகம் செய்யும். விபிஎஃப் என்ற கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்திருக்கிறோம். அதற்கு பதிலாக சிறிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டி ருக்கிறது; என்றனர்.
முன்னதாக பி ஆர் ஓ ரியாஸ் அஹமத் வரவேற்றார். முடிவில் தயாரிப்பாளர் சாய் பாபு நன்றி கூறினார். நிகழ்ச்சியை பாரஸ் ரியாஸ் தொகுத்து வழங்கினார்.