Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இசையமைப்பாளர் டி.இமான் தயாரிப்பாளர் ஆனார்..

மயக்கும், இசைக்கு சொந்தக்காரர் டி.இமான். இவர்  தமிழ் சினிமாவில்  அசாத்தியமான சாதனைகள் செய்துள்ளார். இவரது. இசை பட்டி தொட்டி முதல், எட்டுதிக்கும் எதிரொலிக்கும் மெகா ஹிட் பாடல்களை தொடர்ந்து தந்து வருகிறார். மெலடி பாடல்கள, அதிரடி பாடல்கள் தமிழகத்தில் அனைத்து வீட்டு விஷேசங்களில் முதலிடம் பெறுபவை.

இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் டி.இமான் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கவுள்ளார். “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் D.இமான். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் இந்த ஆல்பத்தில் 8 பாடல்கள் அடங்கியுள்ளது.

இது குறித்து இசையமைப்பாளர் டி.இமான் கூறியதாவது…

இசையமைப்பாளராக எனது வெற்றிப்பயணம் ரசிகர்களின் அளவற்ற அன்பாலும், ஆதரவாலும் நிகழ்ந்தது. அவர்கள் தான் என் வெற்றியின் பெரும் தூண்கள். அவர்கள் கொண்டிருக்கும் அன்பு, தொடரும் எனும் நம்பிக்கையில் தான் “DI Productions” எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன். இந்நிறுவனம் சார்பில் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. 8 பாடல்கள் கொண்டிருக்கும் இந்த ஆல்பம் முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில் ஆடியோ பங்குதாரராக இணைந்திருக்கும் Divo Music நிறுவனத்தாருக்கு எனது நன்றி. விரைவில் திரை இசை அல்லாத, சுயாதீன ஆல்பங்களை தயாரிக்கவுள்ளோம். அதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்

Related posts

தொடர்கதையாகின்றதா மாணவிகளின் தற்கொலை: கமல் கட்சி அறிக்கை

Jai Chandran

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘அனுக்கிரகன்’ பட பர்ஸ்ட் லுக்

Jai Chandran

Makers of ‘Radhe Shyam’ to roll out NFT exclusive collectibles

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend