புரட்சி தலைவர் எம் ஜி ஆர் நடித்த நாடோடி மன்னன் படம் மூலம தமிழ் சினிமாவுக்கு முதல் முறையாக பத்திரிகை தொடர்பாளர் என்ற பிரிவை உருவாக்கி எல்லா படங்களை யும் மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் அரும் பணி யை வாழ்நாள் முழுவதும் செய்தவர் ஃபிலிம்நியூஸ் ஆனந்தன். அவருக்கு இன்று 94வது பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டில் திரையுலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள், வெளியான படங்கள் பற்றிய அரிய தகவல் களை திரட்டி அதை புத்தக வடிவில் இலவசமாக திரையுலகினருக்கு அளிப்பார். அவர் விட்டு சென்ற பணியை இன்றைக்கு அவரது மகன் டைமண்ட் பாபு செய்து வருகிறார்.
சென்னை பிரசாத் ஸ்டுடியோ வில் 2021ம் ஆண்டு புத்தண்டு தினமான இன்று நடந்த ’மாயாத்திரை’ ஆடியோ வெளியீட்டு விழாவில் டைமண்ட் பாபு தயாரித்த கடந்த ஆண்டின் சினிமா தொகுப்பு புத்தகத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.முரளி ராமசாமி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடிகை குஷ்பு வெளியிட நடிகை சுஹாசினி பெற்றுக்கொண்டார்.
previous post