Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரைப்பட இயக்குனர் அமீர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

திரைப்பட இயக்குனர் தனது குடும்பத்தினருடன் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெருந்தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டின் மூலமாக ஓமந்தூரார் சிறப்பு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவர் . பக்தவச்சலம் முன்னிலையில் நானும் எனது குடும்பத்தாரும் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டோம்.
மிகவும் சுகாதாரமாகவும் சிறந்த உபசரிப்புடனும் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசிப் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசிற்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்ரமணியத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும் பாரட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நம்மிடையே நிலவக்கூடிய தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை ஏற்றுக்கொண்டு கோவிட்19 நோயிலிருந்து முழுவதுமாக விடுபடுவோம். வளமான ஆரோக்கியமான நோயில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

இவ்வாறு அமீர்  கூறி உள்ளார்.

Related posts

திரை அரங்கு உரிமையாளர்களுக்கு விநியோகஸ்தர்கள் 4 முக்கிய தீர்மானம்.. டைரக்டர்  டி.ராஜேந்தர் வெளியிட்டார்..

Jai Chandran

கடைசி விவசாயி (பட விமர்சனம்)

Jai Chandran

நாசர், விஷால் கார்த்திக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend