Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளையராஜா இசையில் ஶ்ரீ ராமானுஜராக நடித்த டி.கிருஷ்ணன்

ஹைகிரீவா சினி ஆர்ட்ஸ் . (Hygreeva cine Arts)என்ற பட நிறுவனம் சார்பில் டி. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து மகான் ஶ்ரீ ராமானுஜராக நடித்து தயாரித் துள்ள படம் ” ஸ்ரீ ராமானுஜர் ” ராதாரவி, கோட்டா சீனிவாச ராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன், அனு கிருஷ்ணா, காயத்ரி, சோனியா சிங் வாலா ஆகியோர் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர்.

மகான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகி யுள்ள இந்த படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்துளார்.

பாடல்கள்  வாலி.ஒளிப்பதிவு  மாதவராஜ். வசனம்  ரங்கமணி
எடிட்டிங்  சுரேஷ் அர்ஷ்.
கலை இயக்கம் மஹேந்திரன்
நடனம்  சிவசங்கர், அஜெய்
மக்கள் தொடர்பு  மணவை புவன்
இணை இயக்கம்  வனோத் கண்ணா. இயக்கம் – ரவி வி சந்தர்.
திரைக்கதை எழுதி,தயாரித்துளார் டி கிருஷ்ணன்.

படம் பற்றி ராமானுஜராக வாழ்ந்த டி கிருஷ்ணன் கூறியதாவது….

இது முழுக்க முழுக்க ராமானு ஜரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படம்.

மகான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எங்கள் நிறுவனத் தின் மூலம் திரைப்படமாக எடுத்ததை பெருமையாக நினைக்கிறோம்.

ராமானுஜர் இந்து மதத்தில் புரட்சி செய்த மகான் மட்டுமல்ல இந்து தர்மத்தின் லெஜண்ட் ஆவார்.
சாதி வேறுபாடு அற்ற சமுதாயம் வேண்டும் என்றும், எல்லா மதத்தினருக்கும் நற்கதி என்ற உணர்வையும் மக்களிடையே உருவாக்கியவர்.
இந்த மாபெரும் மகானின் வாழ்க்கை வரலாற்றை இசை ஞானியின் இசையோடு இணைத்து காவியமாக உருவாக்கியுள்ளோம்.

மேலும் கவிஞர் வாலியின் பாடல் வரிகள் சிறப்பாக இருக்கும். பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கும். வரலாற்று படம் என்பதால் மிகுந்த சிரமப்பட்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

படத்தை விரைவில் திரையரங் குகளில் வெளியிட இருக்கிறோம் என்றார் டி. கிருஷ்ணன்.

Related posts

சூர்யா படம் ஒடிடி ரிலீஸ் தள்ளிவாய்ப்பு ஏன்?

Jai Chandran

ரஜினி அரசியல் பஞ்ச் திரைப்பட பாடலானது..

Jai Chandran

DhuvaragaS production No 1 Kathir Movie first look.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend