நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பாலிவுட் வாரிசு நடிகர்கள் அவரை புறக்கணித்ததும், 3 படங்களுக்கு ஒப்பந்தம் வாங்கி வைத்துக்கொண்டு அவரை வேறு படங் களில் நடிக்க விடாமல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதும் முக்கிய காரணமாக பாலிவுட்காரர்களே கூறி உள்ளனர்.
ஒருபோதும் வெளி மாநில நடிகர்கள் ஹீரோ ஆவதற்கு அங்கு இடம் கிடை யாது. வேண்டுமானால் ஒரு சில படங் களில் நடிக்கலாம் அல்லது டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கலாம் ஆனால் அதில் முதல் ஹீரோ பாலிவுட் நடிகராகத்தான் இருப்பார். இதை ரஜினி முதல் கமல் வரை அனுபவித்திருக்கிறார்கள். தற்போது அது தொழில் நுட்ப அதாவது இசை அமைப்பாளர் விஷயத்தில் புறக்கணிப்பு நடந்து வருகிறது. அதுவும் ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நடந்திருக்கிறது.
ரோஜா படம் மூலம் கே,பாலசந்தர், மணிரத்னம் இருவரும் ஏஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தினர். முதல் படமே தேசிய விருதை பெற்று வந்தது. 1995ம் ஆண்டு ரஹ்மானை ராம்கோபால் வர்மா, தான் இயக்கிய ரங்கீலா படம் மூலம் இந்திக்கு அழைத்துச் சென்றார். அப்பட பாடல்கள் சூப்பர் ஹிட் என்பதால் இந்தி பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் பார்வை ரஹ்மான் மீது விழுந்தது.அதன் பிறகு இந்தியில் குறிப்பிடத்தக்க இடம் பிடித்தார்.
ரஹ்மானின் வளர்ச்சி அங்குள்ள சில பெரிய முதலைகளுக்கு பிடிக்கவில்லை. அவரை ஓரம் கட்டும் சூழ்ச்சியை மேற் கொண்டது. ஸ்லம் டாக் மில்லினர் ஹாலிவுட் படத்துக்கு இரண்டு ஆஸ்கர் கொண்டு வந்த நிலையில் ரஹ்மான் மீதான சூழ்ச்சி இந்தியில் இறுகியது. பெரிய படங்களுக்கு இசை அமைத்து வந்த ரஹ்மானுக்கு பட வாய்புகள் குறையத் தொடங்கின.
2020ம் ஆண்டில் அது மிகவும் குறுகி இரண்டு படங்களுக்கு மட்டுமே இசை அமைக்க ஒப்பந்தம் ஆனார். அதில் ஒரு படம் ’தில் பெச்சாரா’. அது பெரிய திரையில் இல்லாமல் ஒடிடி தளத்தில் வெளியாகி விட்டது. மற்றொரு படம் அட்ராங்கி ரே. இப்படத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தை இயக்கும் ஆனந்த் எல் ராய் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர், தனுஷை ராஞ்சனா படம் மூலம் இந்தியில் இவர்தான் அறிமுகப் படுத்தினார்.
99சாங்க்ஸ் என்ற மற்றொரு இந்தி படத்துக்கு ரஹ்மான் இசை அமைக்கிறார். இது ரஹ்மானே சொந்தமாக தயாரிக்கும் படம்.
இந்தி படவுலகில் தனக்கு எதிராக நடக்கும் சதி பற்றி சமீபத்தில்தான் ரஹ்மானுக்கு தெரிய வந்தது. அதை தற்போது வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். ’இந்தியில் எனக்கு வரும் பட வாய்ப்புகளை அங்கிருக்கும் ஒரு கூட்டம் தடுத்து பறிக்கிறது. எனக்கு வாய்ப்பு வராமல் தடை செய்யப்படு கிறது’ என்றார், ரஹ்மானின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஹ்மானின் வாய்ப்புக்களை தடுப்பது யார் என்பது அவருக்கு தெரிந்த போதி லும் அவர்களின் பெயரை சூசகமாகக்கூட தெரிவிக்கவில்லை. முட்டை உடைத்து விட்டார் இனி குஞ்சு வந்துதானே ஆக வேண்டும். இன்னும் சில தினங்களில் ரஹ்மானுக்கு எதிராக செயல்படும் கூட்டம் பற்றிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.