Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மழை, சூறாவளியில் படமான மாதவன் – ஷ்ரத்தாவின் மாறா

ரா. மாதவன் & ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள மாறா கேரளாவின் கரையோரப் பகுதிகளில் எதிர்பாராத மழை மற்றும் சூறாவளிகளுக்கு இடையே படம்பிடிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அமேசான் பிரைம் வீடியோவின் விரைவில் வெளியாகவுள்ள, இசையும் காதலும் வழிந்தோடும் தமிழ்திரைப்படமான மாறாவில் பல்துறை வித்தகி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன், அனைவராலும் மிகவும் விரும்பப்படும் ஒரு ‘லவ்வர் பாய்’ கதாபாத்திரத்தில், ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறச்செய்யும் ரா. மாதவன் நடித்துள்ளார். அவரது மறு திரை வருகையைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களை ஒரு இதயப்பூர்வமான பயணத்திற்கு அழைத்துச்செல்வதை அதன் கதையோட்டம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த டிரெய்லர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. படப்பிடிப்பின் போது நடந்த சில உற்சாகமான மற்றும் அதிகம் அறியப்படாத தருணங்கள் குறித்தும், இந்த அற்புதமான காதல் காவியம், தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த பல்வேறு அழகான இடங்களிலும், மழைக்கு இடையிலும் படம்பிடிக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த காட்சி விருந்தாக உருவாகியுள்ளது குறித்தும் திலிப் நம்மோடு பகிர்கிறார்.

ஒரு திடீர் நேர்காணலில், மாறாவின் இயக்குனர் திலீப் குமார், கேரளாவின் கடலோரப் பகுதிகளில் படத்தின் காட்சிகளை படமாக்கிய எவ்வளவு சவாலாக இருந்தது என்பதையும், எனினும் அவை படப்பிடிப்பின் மிகவும் மனதிற்கு நிறைவான பகுதிகளாக எவ்வாறு இருந்தது என்பதையும் நினைவு கூர்ந்தார்.

“படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் நாங்கள் சூறாவளி எச்சரிக்கைகளைப் பெற்றோம். அத்தகைய மோசமான வானிலையில் படப்பிடிப்பை மேற்கொண்டது மிகவும் கடினமாக இருந்தது. எனினும், வானிலை நிலவரத்தைப் புரிந்துகொண்டவுடன் நாங்கள் காட்சிகளை சரியாகத் திட்டமிட முடிந்தது. முதல் சில முறைகள் நாங்கள் மிகவும் பயந்தாலும், நாட்கள் செல்லச்செல்ல, ஒவ்வொரு நாளும் மேலும் எளிமையான தாகவும் மற்றும் குதூகலமளிப்பதாகவும் மாறியது. ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒரு முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், அது ஒரு யூகிக்கும் விளையாட்டாகவே மாறிவிட்டது. சிறிது நாட்களுக்குப் பின், மழையில் படப்பிடிப்பு நடத்துவது ஒரு பிரச்சனையாகவே இல்லை. இருப்பினும் திரையில் அவ்வளவு மழையையும் நீங்கள் காணமுடியாது. மழை நிற்க காத்திருப்போம், அரை மணி நேரம் நிற்கும், இந்த இடைவெளியில் காட்சியை படம்பிடித்துவிடுவோம்”

இப்படப்பிடிப்பு பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகளை தெரிவித்த இயக்குனர், “படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க ஒரு கடலோர நகரத்தில் படமாக்கப்பட்டது. நாங்கள் சாலைகளில் விரிவாகப் படம்பிடித்தோம். சில சமயங்களில் அந்தப் பக்கமாக பைக்கில் வருபவர்களுக்கு அல்லது தெருவில் நடப்பவர்களுக்கு, அங்கு படப்பிடிப்பு நடப்பதே தெரியாது. இதனால் எங்களால் பல காட்சிகளை மிகவும் யதார்த்தமாகப் படம்பிடிக்க முடிந்தது. பல காட்சிகள் பெரிய அளவிலா திறந்தவெளிகளில் படம்பிடிக்கப்பட்டன. பல காட்சிகளில் கிட்டதட்ட 200 மீ தொலைவிலிருந்து ஜும் லென்ஸ்கள் மூலம் படம்பிடித்தோம். இதனால் நடிகர்களுக்கே தாங்கள் எங்கிருந்து படம்பிடிக்கப்படுகிறோம் என்பது பல நேரங்களில் தெரியாமல் இருந்தது. இதனால் அவர்கள் கதாபாத்திரமாகவே வாழ்ந்து கேமராவைப் பாராமலேயே பல காட்சிகளில் நடித்தள்ளனர். இத்தகைய காட்சிகளை நிச்சயம் சென்னையிலோ அல்லது தமிழகத்தின் வேறு எந்தவொரு பகுதியிலோ எங்களால் நிச்சயம் படம்பிடித்திருக்க முடியாது” என்று கூறினார்.

2015 ஆம் ஆண்டில் கல்கி என்ற குறும்படத்தை இயக்கிய திலீப் குமாரின் முதல் அறிமுக முழுநீளத் திரைப்படம் மாறா ஆகும். பிரமோத் ஃபிலிம்ஸின் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ள மாறா திரைப்படத்தில், அலெக்சாண்டர் பாபு, ஷிவதா, மௌலி, பத்மாவதி ராவ் மற்றும் அபிராமி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜனவரி 21, 2021 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக மாறாவின் உலகளாவிய பிரீமியர் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. உங்கள் நாள்காட்டியில் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்!

Related posts

ஜாலியோ ஜிம்கானா (பட விமர்சனம்)

Jai Chandran

பிளேபாய் ராம்கி: குருமூர்த்தி பட விழாவில் செல்வமணி பேச்சு

Jai Chandran

டாக்டர் விஜய் சங்கருக்கு மு.க.தமிழரசு வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend