Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஹன்ஷிகாவின் One not Five Minutes திரைப்படம் !

உலகில் வெவ்வேறு நாடுகளின், பல்வேறு மொழிகளில் வெளி யாகும் ஹன்ஷிகா மோத்வானிி யின் One not Five Minutes திரைப்படம்.

நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் One not Five Minutes திரைப்படம் அறிவிப்பு வெளியான கணத்திலிருந்தே, ரசிகரிளிடம் எதிர்பார்ப்பு மிக்க ஒரு படமாக இருந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தயாரிப்பாளர்கள், உலகளவில் ரசிகர்களை ஈர்க்கும் பொருட்டு, இப்படத்தினை உலகிலுள்ள பல நாடுகளின் பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தினை தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய பிராந்திய மொழிகளல்லாமல் சைனீஸ், கொரியன் உள்ளான மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்திய திரையின் மொத்த வரலாற்றில், மூன்றாவது முறையாக, ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகும் படம் எனும் சிறப்பை, இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் 15 நாள் ரிகர்சலுக்கு பிறகு, வெறும் 6 நாட்களில் படமாக்கப்பட்டது. படத்தில் மொத்தமாக 5 லிருந்து 6 சீக்குவன்ஸ் காட்சிகளே உள்ளது. ஒவ்வொரு காட்சியும் திரையில் 20 நிமிடங்கள் வரை வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இது போல் பல்வேறு சிறப்பு தன்மைகளை பெற்ற ஒரு புதுவித அனுபவத்தை தரும் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

One not Five Minutes திரைப்படம் திரை நேரத்தில், மிகச்சரியாக 105 நிமிடங்களில் கதையின் சம்பவங்கள் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படத்தினை வெளியிடவுள்ளனர்.
மேலும் இப்படத்தில் குறிப்பிடதக்க மற்றொரு அம்சம் என்னவெனில், ஒரு கதாப்பாத்திரத்தினை கொண்டு, முழுப்படமும் ஒரே ஷாட்டில் வரும்படியான முதல்படமாக இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

One not Five Minutes படத்தினை Bommak Shiva மற்றும் Rudransh Celluloid இணைந்து தயாரித்துள்ளனர். Raja Dussa இப்படத்தினை இயக்கியுள்ளார். சாம் CS இசையமைக்க, கிஷோர் பயிபோட் (Kishore Boyipadu) ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related posts

மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ” 99/66 “..

Jai Chandran

கடலுக்கடியில் வெளியிட்ட ‘யானை’ படத்தின் போஸ்டர்!

Jai Chandran

Keerthi Nominated as goodwill ambassador for women’s cricket in Kerala

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend