Trending Cinemas Now
விமர்சனம்

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். விமர்சனம்

ஒரு தாதா டாக்டர் ஆவது, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். ஒரு தாதா பேயாகி, பிறகு டாக்டராக மாறினால், அது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். ஆரவ், ஒரு பெரிய மார்க்கெட் தாதா. அவரைப் பார்த்து அமைச்சர்கள் முதல் அல்லக்கைகள் வரை அஞ்சி நடுங்குகின்றனர். கொலை, கொள்ளை இதுதான் அவரது குலத்தொழிலாகும். அவருடைய காட்பாதர் ஷாயாஜி ஷிண்டே, ரெய்டுக்கு பயந்து, தனது சொத்துகளை ஆரவ்விடம் தந்து பாதுகாப்பாக வைக்க சொல்கிறார். இந்த நிலையில் ஆரவ்வை போட்டுத்தள்ள, ரகசிய என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டை நியமிக்கிறார், உயர் போலீஸ் அதிகாரி.

ஆரவ்வை போலீஸ் என்கவுன்டர் செய்யும்போது, தவறுதலாக மருத்துவக் கல்லூரி மாணவர் விஹான் இறந்துவிடுகிறார். பிறகு அவரது ஆவி, ஆரவ் உடலுக்குள் புகுந்து கொண்டு விடுகிறது. இதனால், மார்க்கெட் ராஜாவான ஆரவ், டாக்டர் ஆகிறார். அவரிடம் இருந்த வீரம் காணாமல் போய், மிகப் பெரிய கோழையாகி விடுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. முதல் படத்திலேயே விஜய், அஜீத் குமார் ரேஞ்சுக்கு ஆக்‌ஷன் ஹீரோ ஆக முயற்சித்து இருக்கிறார், ஆரவ். தாதாவாக தெனாவட்டு காட்டும்போது, ஓரளவு தேறி விடுகிறார். திடீரென்று கோழையான பிறகு அவரது நடிப்பு எடுபடவில்லை.

அவரது அம்மா ராதிகா, கோவை சரளா ரேஞ்சுக்கு இறங்கி வந்து காமெடி செய்திருக்கிறார். ஆனால், பலவீனமான திரைக்கதையால் அவருடைய நடிப்பு வீணாகி இருக்கிறது. அதுவும் சொந்த மகனிடமே அடி வாங்கி காமெடி செய்திருப்பது உறுத்தல்.
அயோக்கியன் என்று தெரிந்தும், ஆரவ்வை உருகி உருகி காதலிக்கும் வழக்கமான ஹீரோயினாக காவ்யா தாப்பர் வருகிறார். மருத்துவக் கல்லூரி முதல்வர் நாசர், பேராசிரியர் மதன்பாப், பேய் ஓட்டுநர் தேவதர்ஷினி, அவரது கணவர் முனீஸ்காந்த், அமைச்சர்கள் ஷாயாஜி ஷிண்டே, ஹரீஷ் பெராடி ஆகியோர் காமெடி பீஸாக வந்து செல்கின்றனர்.

நிகிஷா பட்டேல், கவர்ச்சிக்கு மட்டுமே வருகிறார். அம்மா உணவகத்தில் பணியாற்றும் பேச முடியாத தாய் ரோகிணி, மருத்துவக் கல்லூரியில் படிக்கும் அவரது மகன் விஹான் ஆகிய இருவருடைய அன்பும், பிணைப்பும்தான் படத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதி. கே.வி.குகன் ஒளிப்பதிவு, கதை நகர உதவி செய்திருக்கிறது. சைமன் கே.கிங் பின்னணி இசையில் இரைச்சல். லாஜிக், கதை, காமெடி என்று எதற்கும் மெனக்கெடாமல், மனம் போன போக்கில் படம் கொடுத்துள்ளார் இயக்குனர் சரண்.

Related posts

ஒரு நொடி. ( பட விமர்சனம்)

Jai Chandran

அவதார் : பயர் அண்ட் ஆஷ் ( ஆங்கில பட விமர்சனம்)

Jai Chandran

கட்டா குஸ்தி (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend