Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ZOY நிறுவனம் புதிய முயற்சி..

பெண்களின் மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி, அவர்களின் ஒட்டுமொத்த உடல் நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் ZOY நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இந்நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் இணை நிறுவனர் நடிகை சமந்தா ரூத் பிரபு, ZOY நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஷிதிஜா நஹதா- நிறுவனர் ஃபிட் செஃப் மற்றும் நியூட்ரிஷன் வெல்னஸ் கோச், ஷைனி சுரேந்திரன்- விளையாட்டு, ஹோலிஸ்டிக் தடுப்பு உணவியல் நிபுணர்; மற்றும் முன்னணி மகளிர் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் பத்மா ராமகிருஷ்ணன் மற்றும் டாக்டர் நரசா நாராயணி ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

‘மாதவிடாய் காலத்தைத் தாண்டிய ஆரோக்கியம்’ (Wellness Beyond Your Period) என்ற கருப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலில், ஹார்மோன் சமநிலை, அந்தரங்கப் பகுதி சுகாதாரம், மாதவிடாய் காலப் பொருட்களின் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் பெண்களின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் உடல்நல மாற்றங்கள் குறித்து இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது

ZOY நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி, ஜவுளித் துறையில் தனக்குள்ள 16 ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில், பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான மாதவிடாய் பராமரிப்புப் பொருட்களை வழங்கும் நோக்கில் இந்நிறுவனத்தைத் தொடங்கியதாகத் தெரிவித்தார்

நடிகையும் நிறுவனத்தின் இணை நிறுவனருமான சமந்தா ரூத் பிரபு பேசுகையில், பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்த விழிப்புணர்வைப் பெறுவதுடன், தாங்கள் பயன்படுத்தும் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அறிந்து, சிந்தித்துத் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மூலிகைகள் சேர்க்கப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், பாக்டீரியா எதிர்ப்புத் தொழில்நுட்பத்துடன் கூடிய நாப்கின்கள், மூலிகை வெல்னஸ் லைனர்கள், ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் உள்ளாடைகள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் கப் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை ZOY அறிமுகப்படுத்தியுள்ளது

மாதவிடாய் காலப் பராமரிப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல், பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம், விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான தயாரிப்புத் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இம்முயற்சியின் நோக்கம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

பிரபாஸ் சலார் ரூ. 402 கோடி ரூபாய் வசூல்

Jai Chandran

ரசிகர்கள் ஆதரவு அலையில் யுவனின் ஸ்வீட் ஹார்ட்

Jai Chandran

Jango India’s first time loop Sci-fi movie Nov 19 In theatres

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend