Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜெயிலர் 2 (பட விமர்சனம்)

படம்: ஜெய்லர் 2

நடிப்பு: ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன்,  எஸ் ஜே சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சூரஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன் யோகி பாபு, மிர்னா, ரித்விக், ஜெட்டின் சர்னா, பகவதி பெருமாள், கோட்டையம் நசீர், சுனில் சுகாதா, சுஜித் சங்கர், நமோ நாராயணா, பி எல் தேனப்பன்  இவர்களுடன் மிதுன் சக்ரவர்த்தி, ஹிருத்திக் ரோஷன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷரப், விஜய் சேதுபதி

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்

ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்

இசை: அனிருத்

இயக்கம்: நெல்சன் திலிப்குமார்

பி ஆர் ஓ : ரியாஸ் கே அகமத், பாரஸ் ரியாஸ்

:கதை 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியாகி இருக்கிறது ஜெயிலர்.  2. முதல் பாகத்தில் சிலை கடத்தல் தாதா வர்மனை (விநாயகன் ) ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்) தீர்த்து கட்டுகிறார். வர்மனை கொன்றது யார் என்று தெரியாமல் அவனைச் சார்ந்த கூட்டத்தினர் தேடி வருகின்றனர். ஒரு கட்டத்தில் ஜெயிலர்தான்  வர்மனை கொன்றார் என்ற உண்மையை சிலை கடத்தல் கூட்டம் கண்டுபிடிக்க  அந்த கூட்டத்துக்குள் புகுந்து கூட்டத்தின் தலைவனை அட்டாக் செய்கிறார் ஜெயிலர். அவனை வைத்து சிலை கடத்தல் ஒட்டுமொத்த கூட்டத்தின் தலைவன் போதி கல்பக்கை (எஸ் ஜே சூர்யா ) தீர்த்துக்கட்ட ஜெயிலர் திட்டமிடுகிறார். அவரது திட்டம் நிறைவேறியதா? இதற்கிடையில் அவருக்கு வரும் எதிர் தாக்குதல்கள் என்ன? என்பதற்கு அதிரடி ஆக்ஷனுடன் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்

வழக்கமாக இரண்டாம் பாகம் படங்கள் என்பது பெரிதாக ஒர்க் அவுட் ஆகுவது இல்லை. அதற்கு விதிவிலக்காக ஜெயிலர் 2   அமைந்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று பெயரைக் கேட்டாலே அதிரும்.. இதில் அவரது ஆக்சன்  எந்த அளவுக்கு உச்சம் அடைந்திருக்கிறது என்றால் இன்னும் ஐந்து வருடத்திற்கு அவரை அசைக்க முடியாது என்ற அளவுக்கு உச்சத்துக்கு கொண்டு போய் விட்டிருக்கிறது  இத்தனைக்கும் அவர் பாய்ந்து குதித்து எந்த சண்டையும் செய்யவில்லை அந்த ஸ்லோ மோஷன் நடை, தீப்பொறி பறக்கும் பார்வை, திரையைக் கிழிக்கும் ஸ்டைல் இந்த மூன்றுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாக படமாக்கி இருந்தால் கூட அமர்ந்து பார்க்கும் அளவுக்கு அத்தனை விறுவிறுப்பு.

எதிரி மிரட்டும் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சைலண்டாக இருக்கிறார் என்றாலே அந்த இடத்தில் ஸ்னைப்பர் குண்டுகள்  அடுத்து பாயப் போகிறது என்ற  அந்த சைலன்ட் மோட் அரங்கை இன்னும் சைலன்ட்டாக்குகிறது.

துப்பாக்கி எடுத்தால்  அல்லது  கத்தி எடுத்தால் எதிரியின் தலையை கண்டிப்பாக துண்டிக்காமல் வைக்க மாட்டார் என்பதை துப்பாக்கி கத்தி எடுக்கும் ஒவ்வொரு தருணத்திலும் ரஜினிகாந்த் மிரட்டி விடுகிறார்

கிளைமாக்ஸ் நெருக்கத்தில் ரஜினிகாந்த் சொல்லும் அந்த ஒரு வசனம், ” 50 வருடமாக என்னை முடிக்க பார்க்கிறார்கள் ஆனால் யாராலும் முடியவில்லை” என்று சொல்லும் போது அரங்கமே கைத்தட்டலில் அதிர்கிறது.

முதல் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஆபத்து நேரத்தில் எப்படி மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கி ஷெரப் போன்றவர்கள் கைகொடுத்தார்களோ அவர்களுடன்  இந்த படத்தில் கூடுதலாக ஹிருத்திக் ரோஷன் இணைந்திருக்கிறார். இதை யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை படத்திற்கு பெரிய பூஸ்ட்டாக இவர்கள் இருக்கிறார்கள்.

படத்தில் பெரிய வில்லனாக தனது அடாவடி ஆக்ரோசத்தை காட்டியிருக்கிறார் எஸ் ஜே சூர்யா. இவருடன் மலையாள நடிகர் சூரஜும் கொஞ்சம் முறைப்பு காட்டி இருக்கிறார்.

நெல்சன் படம் என்றாலே ஆக்சன் இருக்கும் அதோடு சேர்ந்து காமெடியும் இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். யோகி பாபு ஒரு பக்கம் காமெடி செய்தால் இன்னொரு பக்கம் நமோ நாராயணா காமெடி செய்கிறோம் என்பது தெரியாமலே காமெடி செய்து சிரிக்க வைக்கிறார்.

ரஜினியின் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் தனது முதல் பாக படத்தில் தொடர்ந்த  அதே செண்டிமெண்டை இதிலும் தொடர்கிறார். கூடுதலாக வித்யா பாலன் வில்லியாக களமிறங்கி இருக்கிறார். ரஜினிக்கும் அவருக்கும் நடக்கும் அந்த குட் மார்னிங் உரையாடல் அதைக் கண்டு கடுப்பாகும் எஸ் ஏ சூர்யாவின் பொறாமை அரங்கை கலகலப்பாக்குகிறது.

அலே பொலேலோ  பாடலுக்கு பூர்ணா, பிந்தாஸ் பாடலுக்கு நோரா பதேஹி  நடனத்தில் பின்னி எடுக்கிறார்கள்.

படத்தில் இன்னொரு ஹைலைட் அனிருத் இசை. ரஜினிகாந்த் நடந்தாலும் முறைத்தாலும்  அனிருத் இசை இரண்டையும்  டாப் கிளாசுக்கு கொண்டு போய் நிறுத்தி விடுகிறது.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு  அமர்க்களம்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தாராளமாக செலவு செய்து படத்தை பிரமாண்டமாக்கியிருக்கிறார்.

இயக்குனர் நெல்சன், ஜெயிலர் 2 படத்தை இப்பொழுது விடுவதாக தெரியவில்லை ஜெய்லர் 3  எடுப்பதற்கும் ஒரு லீட் கொடுத்து கிளைமாக்ஸ் முடித்திருப்பது இன்னொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெயிலர் -2  – ரஜினியே பார்த்தாலும் இப்படி நடித்திருக்கிறோமா என்று  மிரண்டுபோவார்..

 

Review by

K. Jayachandhiran www.trendingcinemasnow.com

 

 

 

 

 

 

Related posts

லால் சிங் சத்தா (பட விமர்சனம்)

Jai Chandran

தமிழக முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு தங்கர்பச்சான் வாழ்த்து

Jai Chandran

மோகனின் ஹரா படத்தில் அறிமுகமாகும் இளம் நடிகர் சந்தோஷ் பிரபாகர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend