Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விவேக்கிற்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் இரங்கல்..

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் நேற்று  சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிலாமல் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுல்கினர் அஞ்சலி ச்லுத்தி வருகின்றனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி  நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக் கிறார்.  அவர் கூறியதாவது:
1987ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ” மனதில் உறுதி வேண்டும்” திரைப்படம் மூலம் விவேக் அவர்கள் நடிகராக அறிமுகமானார்.

34 வருடங்களாக மக்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் இன்று காலமானார்.

ஐந்துமுறை தேசிய விருதும் தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை விருது மற்றும் கலைமாமணி சின்னக்கலைவாணர், ஜனங்களின் கலைஞன் உட்பட பட்டங்கள் பல பெற்ற ஒப்பற்ற கலைஞன் என போற்றப்பட்டவர் விவேக்.

தயாரிப்பாளர்களின் மனதில் மட்டுமல்ல ரசிகர்களின் மனதிலும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் இதயத்திலும் இடம்பிடித்து பவனி வந்த விவேக் அவர்களின் மறைவு சமுதாயத்திற்கு மட்டுமல்ல திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

விவேக் அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு என். ராமசாமி என்கிற முரளி இரங்கல் செய்தியில் கூறி உள்ளார்.

Related posts

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை…

Jai Chandran

தாய் கிழவி (பட விமர்சனம்)

Jai Chandran

’பூமி படத்தில் ஜெயம் ரவி போலவே என் பாத்திரமும் கவனத்தை ஈர்க்கும்’ நிதி அகர்வால்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend