நடிகர் விவேக் இன்று காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சின்னகலைவாணர் என்றழைக்கப்பட்ட நடிகர் விவேக். நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்நிலையில் அவர் வீட்டில் நேற்று குடும்பத்தினர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்,. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் விவேக் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை 4.35 மணிக்கு மரணம் அடந்ததாக மருத்துவமனை அறிவித்தது. அவருக்கு வயது 59. விவேக் உடல் மருத்துவமனையிலிருந்து விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
ரசிகர்களும், பொதுமக்களும் விவேக் உடலுக்கு வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விவேக் மறைவு திரையுலகினரையும், ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யாரஜ் உ:ள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல்:
சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் மறைவு செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர் நடிகர் விவேக். கலை சேவையாலும், சமூக சேவையாலும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு.. பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக்.
எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது. தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு, திரைத்துறைக்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். நடிகர் விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல்:
மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அன்பு சகோதரர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன் திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பிய விவேக் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர்.
நடிகர் விவேக் அவர்களின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார்.
விவேக் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல்:
சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்.
நடிகர் பிரபு தெரிவித்துள்ள இரங்கலில், ’அன்பு தம்பியை இழந்து விட்டேன்’ என உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பிரபு கூறிய தாவது:
தம்பி விவேக் மறைந்து விட்டார் என்று நினைக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. நமக்கே ஆறுதல் சொல்லிக்கொள்ள முடியவில்லையே… நல்ல மனிதர், திறமையான கலைஞன். எவ்ளோ படங்கள் தம்பி விவேக்குடன் நடித்திருக் கிறேன். குறிப்பிட்டு சொல்லப் போனால் பொழுது விடிஞ்சாச்சு மிடில்கிளாஸ் மாதவன் இப்படி பல படங்கள்.
ஷூட்டிங் வரும்போதெல் லாம் பேப்பர்களை படித்துக்கொண்டிருப்பார். அவரிடம், ’இந்த பழக்கம் உண்டா?’ என்றேன். அண்ணே அன்னன்னிக்கு என்ன பிரச்னை இருக்கிறதோ அதை வசனத்தில் சொல்லலாம் என்றார். அதுபோல் சமூக பிரச்னைகளை நகைச்சுவை யோடு மக்களுக்கு எடுத்துச் சென்று சேர்த்தவர் விவேக். அருமையான கலைஞனை இழந்துவிட்டோம். அருமை யான நண்பரை இழந்து விட்டேன். ஒரு அருமையான தம்பியை நான் இழந்துவிட் டேன். எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரிய வில்லை. ரொம்ப ஷாக்காக இருக்கிறது. என்னிடம் போனில் அடிக்கடி பேசுவார் . அண்ணே எப்படி இருக்கீங் கன்னு கேட்பார். அன்பான ஒரு தம்பி, அவர் இழப்பை நம்மாலேயே தாங்கமுடிய வில்லையே அந்த குடும்பத் தார் எப்படி தங்குவார்கள். திரையுலகம் இருக்கும் வரைக்கும் தம்பி விவேக் வாழ்ந்துக்கொண்டுதான் இருப்பார். என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவ்வாறு பிரபு தெரிவித்தார்.