லாரன்சுக்கு ரஜினி அனுப்பிய100மூட்டை அரிசி..
கமல், விஜய் அஜீத்திடம் உதவி கேட்கிறார்..
கொரோனா ஊரடங்கில் சினிமா தொழிலாளர்கள், ஏழை எளியவர்க ளுக்கு உதவ நடிகர், நடிகைகள் லட்சம்,கோடிகளில் நிதி அளித்துள் ளனர். நடிகர் ராகவா லாரன்ஸ் 3கோடி ரூபாய்க்கு மேல் நிதி அளித்தார்.
தற்போது ராகவா லாரன்ஸ் உதவிகேட்டு கோரிக்கை விடுத்திருக் கிறார்.அவர் டிவிட்டரில் கூறியிருப்ப தாவது:
இந்த கஷ்டமான சூழ்நிலையில் பலர் உதவி கேட்டு என்னை தொடர்பு கொண்டு வருகின்றனர். அவர்கள் கேட்பது பணம் அல்ல, உணவுக்கு தேவையான பொருட்கள் மட்டுமே. என்னால் முடிந்தளவு நானும் உதவிகள் செய்து வருகிறேன். என் ஒருவனால் மட்டுமே அனைவருக்கும் உதவி செய்திட முடியாது. இதுகுறித்து என் தம்பியிடம் பேசியபோது, இந்த முயற்சி யில் இன்னும் பலரை சேர அழைக்கலாம் எனக் கூறினார். இதுகுறித்து நடிகர் ரஜினியிடம் பேச, அவர் 100 மூட்டை அரிசிகளை அனுப்பி வைத்தார். இதையடுத்து இந்த முயற்சியில் கை கோர்க்க நான் அழைப்பு விடுக்கிறேன்.
நடிகர்கள் கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் அவர்களின் ரசிகர்கள், அரசியல் வாதிகள், பொதுமக்கள் என உதவ விருப்பமிருப்பவர்கள் அனைவரும், இந்த முயற்சியில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
நாங்கள் நிதி கேட்கவில்லை, அத்தியாவசிய உணவு பொருட்கள் மட்டுமேபோதும். அதை அனுப்பி வைத்தால், நாங்கள் உரியவர்களிடம் சேர்க்கும் வேலையை பார்த்து கொள் கிறோம்.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.
#ragavalawarance requesr rajni, kamal, ajth, vijay suriya
#ராகவாலாரன்ஸ் #ரஜினி #கமல் #விஜய் #அஜித் #சூர்யா